ஜெய்-அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா ஆகியோர் நடித்திருக்கும் "கேப்மாரி'தான் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரின் கடைசிப் படம். இந்தப் படத்தில் மட்டும் ""எந்த சேட்டை யும் பண்ணாமல், கரெக்டான டயத்திற்கு வந்து நடித்துக் கொடுத்தார்'' என ஜெய்க்கு குட் சர்டிபிகேட் கொடுத்தார் எஸ்.ஏ.சி. டிசம்பர் 6-ஆம் தேதி படத்தை ரிலீஸ் பண்ண ப்ளான் பண்ணியிருக்கிறார்கள்.

Advertisment

sc

ஆனால், ஜெய்யின் இதற்கு முந்தைய படங்கள் ஊத்திக்கொண்டதால், கடைசி நேரத்தில் விநியோகஸ்தர்கள் பஞ்சாயத்தைக் கூட்டி பிரேக் போடும் முடிவில் உள்ளார்களாம்.

""விநியோகஸ்தர்களின் அக்கப்போர் ஒருபக்கம் என்றால், அரசாங்கத்தின் சார்பிலும் "கேப்மாரி-'க்கு ஆப்படிக்கும் வேலைகளும் நடக்கலாம் என்கிறார்கள். ஏன்னா, "கேப்மாரி-'யை சுருக்கி "சி.எம்.' என வைத்ததை போட்டுக் கொடுத்தார் டைரக்டர் சங்கத்தலைவரான ஆர்.கே. செல்வமணி.

Advertisment

sac

மேலும், "ரஜினி- கமல் இணையவேண்டும், ஆட்சியைப் பிடிக்கவேண்டும். அதன்பின் தனது மகன் விஜய் ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கான தகுதி அவனுக்கு இருக்கிறது' என ஓப்பனாகவே பேட்டி கொடுத்தார் எஸ்.ஏ.சி. இதெல்லாம் ஆளுந்தரப்பிற்கு கடுப்பையும், எரிச்சலையும் கிளப்பியிருப்பதால், "கேப்மாரி'-க்கு ஆப்படிக்கும் வேலைகளில் இறங்கலாம்'' என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

அதே கோடம்பாக்கத்தில் சில தயாரிப்பாளர்கள், ""ஓடாத படத்திற்கு இலவசமாகப் பப்ளிசிட்டி கொடுத்து ஓடவைக்கும் வேலைகளில் அரசாங்கம் இறங்காது'' என்கிறார்கள்.

-பரமு