Advertisment

வாய்ப்புக்கு ஆப்பு

/idhalgal/cinikkuttu/wedge-opportunity

"நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத், நானி நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற "ஜெர்ஸி' படத்தின்மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ஒரு நடிகையாக ம

"நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத், நானி நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற "ஜெர்ஸி' படத்தின்மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ஒரு நடிகையாக முதல் படத்திலேயே தெலுங்கு சினிமாவில் ஸ்ரத்தாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைவைத்து பல இயக்குநர்களிடமும் கதைகேட்டு வந்தார்.

Advertisment

ss

சமீபத்தில் ஸ்ரத்தா வின் இரண்டாவது தெலுங்குப் படமான "ஜோடி' ரிலீஸானது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வந்ததற் கான தடயமே இல்லாததுபோல அந்தப் படத்தின் கதை முடிந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல வெகுசிலரும் ஸ்ரத்தாவா இந்தமாதிரி ஒரு படத்தில் நடித்தார் என்று விமர்சனத்தைக் கொளுத்திப்போட்டார்கள். உண்மையில், "ஜெர்ஸி'-க்கு முன்ன தாகவே "ஜோடி' படத்தில்தான் ஸ்ரத்தான் நடித்திருந்தார். ஆனால், தயாரிப்பு காரணங்களால் ரிலீஸுக்கு தாமதமாகி, அது அவருடைய பட வாய்ப்புகளுக்கே பெரிய ஆப்பாக மாறிவிட்டது. இனிமேல் கதைதேர்வில் கவனம் செலுத்துவதில் உறுதியாக இருக்கிறா ராம் ஸ்ரத்தா.

cini121119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe