தென்னிந்திய நடிகைகளில் முதன்முறையாக காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூர் மேடம் டுஸாட் மெழுகு சிலை மாளிகையில் கடந்த 5-ஆம் தேதி திறக்கப்பட்டது.

இதுகுறித்து காஜல் அகர்வால் மகிழ்ச்சி பொங்கப் பேசினார்.

ff

""என்னை நானே ஒரு கலைஞரின் விழியில் பார்க்கிறேன் எனக்கும் சிலைக் குமான ஒப்பீடு அபாரமானதாக உள்ளது. ஒரு சிறு பிசிறில்லாமல் அத்தனை நுண் விவரங்களுடன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தருணம் என் வாழ்வின் இன்றிய மையாத பொன்னான தருணம். உலகின் மிகமிகப் பிரபலமான நபர்களின் சிலைகளுடன் எனது சிலையும் இடம்பெற்றிருப்பதில் மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்'' என்றார்.