Advertisment

அதிதிபாலனின் அக்கப்போர்! -டைரக்டர் மேல் டவுட்!

/idhalgal/cinikkuttu/warrior-admiral-director-top-doubt

"அருவி'-ன்னு ஒரு படம் ஆஹா..ஓஹோன்னு ஓடுனாலும் ஓடுச்சு, அந்தப் படத்தின் அதிதிபாலனுக்கு பேரும் புகழும் கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சு. அந்த கொட்டுல அம்மணிக்கு மூளையெல்லாம் வீங்கிப் போச்சு போல. உடனடியா பல வாய்ப்புகளை மறுத்த

"அருவி'-ன்னு ஒரு படம் ஆஹா..ஓஹோன்னு ஓடுனாலும் ஓடுச்சு, அந்தப் படத்தின் அதிதிபாலனுக்கு பேரும் புகழும் கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சு. அந்த கொட்டுல அம்மணிக்கு மூளையெல்லாம் வீங்கிப் போச்சு போல. உடனடியா பல வாய்ப்புகளை மறுத்துவிட்டார் அதிதி.

Advertisment

aadhithibalan

சமீபமாக, முன்னணி டைரக்டர்கள், தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து அதிதியைத் தொடர்பு கொண்டு கதை சொல்ல வரலாமா எனக் கேட்டிருக்கிறார்கள். "நான் ரொம்ப பாப்புலரான வக்கீல், ஒரு கேஸ் விஷயமா டீப்பா டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்' என போட்டுத் தாக்கியிருக்கிறார்.

Advertisment

மறுநாளே அந்த டைரக்டரை தொடர்பு கொண்டு கதை சொல்ல வாங்களேன் என்பார். உற்சாகமாகப் போகும் டைரக்டர்கள் அடச்சீ.. என திரும்பி வருகிறார்களாம். இதுவரை 20 டைரக்டர்கள், 100 கதைகள் கேட்டும் அதிதிபாலனுக்கு எதுவுமே பிடிக்கவில்லையாம். "சான்ஸ் கிடைக்கும்போது கெட்டியா புடிச்சுக்கடி' என ஃப்ரண்ட்ஸ்கள் சொன்னாலும், "என்னோட ரேஞ்சுக்கு எந்தக் கதையும் செட்டாகலை' என்கிறாராம் அதிதிபாலன். "இவளின் அக்கப்போர் தாங்கவே முடியவில்லை' என சலித்துக் கொள்கிறார்கள் அதிதியின் தோழிகள்.

ஒருவேளை அந்த டைரக்டர் தான் அதிதியை கண்ட்ரோல் பண்ணுகிறாரோ என அறிமுக டைரக்டர் மேல் டவுட் படுகிறார்கள் கதை சொல்லப்போன டைரக்டர்கள்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe