Advertisment

சூடு கிளப்பும் கவர்ச்சி சண்டை!

/idhalgal/cinikkuttu/warm-kavarchi-fight

மீரா மிதுன்.

சென்னைப் பெண்ணான இவர் மாடலிங்கில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். "8 தோட்டாக்கள்', "தானா சேர்ந்த கூட்டம்', "போதை ஏறி புத்திமாறி' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். "மிஸ் சௌத் இந்தியா' பட்டமும் வென்றவர். சினிமாவிலும் மாடலிங்கிலும் பெயர் வாங்குவதைவிட, சர்ச்சைகள் மற்றும் வில்லங்கங்கள் மூலம் பெயர் வாங்குவதில் மீரா மிதுனுக்கு அலாதிப் பிரியம்.

Advertisment

dd

அழகிப் போட்டி நடத்தும் ஜோ மைக்கேல் பிரவீனுக்கும் மீரா மிதுனுக்குமிடையே நடந்த கசமுசா கரைச்சலால், இன்னொரு பார்ட்டியின் சப்போர்ட்டுடன் அழகிப் போட்டியைத் தனியே நடத்த ஆரம்பித்தார் மீரா மிதுன். இத னால் கடுப்பான ஜோ மைக்கேல், ""அழகிப்போட்டி நடத்துவதாகச் சொல்லி ஏகப்பட்ட இளம்பெண்களிடம் பணத்தை ஆட்டையப் போட்டுவிட்டார் மீரா மிதுன். எனவே, அவர் நடத்தும் அழகிப் போட்டியை நிறுத்துவதோடு, மீரா மிதுன்மீ

மீரா மிதுன்.

சென்னைப் பெண்ணான இவர் மாடலிங்கில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். "8 தோட்டாக்கள்', "தானா சேர்ந்த கூட்டம்', "போதை ஏறி புத்திமாறி' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். "மிஸ் சௌத் இந்தியா' பட்டமும் வென்றவர். சினிமாவிலும் மாடலிங்கிலும் பெயர் வாங்குவதைவிட, சர்ச்சைகள் மற்றும் வில்லங்கங்கள் மூலம் பெயர் வாங்குவதில் மீரா மிதுனுக்கு அலாதிப் பிரியம்.

Advertisment

dd

அழகிப் போட்டி நடத்தும் ஜோ மைக்கேல் பிரவீனுக்கும் மீரா மிதுனுக்குமிடையே நடந்த கசமுசா கரைச்சலால், இன்னொரு பார்ட்டியின் சப்போர்ட்டுடன் அழகிப் போட்டியைத் தனியே நடத்த ஆரம்பித்தார் மீரா மிதுன். இத னால் கடுப்பான ஜோ மைக்கேல், ""அழகிப்போட்டி நடத்துவதாகச் சொல்லி ஏகப்பட்ட இளம்பெண்களிடம் பணத்தை ஆட்டையப் போட்டுவிட்டார் மீரா மிதுன். எனவே, அவர் நடத்தும் அழகிப் போட்டியை நிறுத்துவதோடு, மீரா மிதுன்மீது கிரிமினல் ஆக்ஷன் எடுக்க வேண்டும்'' என சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

பதிலுக்கு மீரா மிதுனும், ""ஜோ மைக்கேல் பெரிய ஃப்ராடு. அவர்தான் நிறைய இளம் பெண்களிடம் வசூல் பண்ணியிருக்கார். எனவே அவர்மீது கிரிமினல் ஆக்ஷன் எடுக்க வேண்டும்'' என புகார் செய்ததோடு, ""நான் நடத்தப்போகும் அழகிப் போட்டியை, ரவுடிகள் துணையோடு தடுத்து நிறுத்தப் பார்க்கிறார்'' என ஜோ மீது கடுமையாகப் பாய்ந்தார் மீரா மிதுன்.

Advertisment

dd

இதனால், மேலும் டென்ஷனான ஜோ மைக்கேல், மீரா மிதுனுக்கு வழங்கியிருந்த "மிஸ் சௌத் இந்தியா' பட்டத்தைப் பறித்து, அந்தப் போட்டியில் இரண்டாம் இடம்பெற்ற ஷனம் ஷெட்டிக்கு வழங்கி னார். இப்படியெல்லாம் சட்டையே கிழியாமல் சண்டை நடந்துகொண்டி ருந்தபோதுதான் விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் "பிக்பாஸ்' போட்டியில் கலந்துகொண்டார் மீரா மிதுன். "பிக்பாஸ்' வீட்டுக்குள்ளும் ஏகப்பட்ட சர்ச்சைகள் இவர் மீது கிளம்பின.

இந்த நிலையில்தான், மீரா மிதுனை விடுவதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்தார் ஜோ மைக்கேல். இவர், மீரா மிதுன்மீது ஏற்கெ னவே கொடுத்த புகாரின்படி, கடந்த ஜூலை. 25-ஆம் தேதி "பிக்பாஸ்' வீட்டுக்குள் நுழைந்தது போலீஸ். "அழகிப் போட்டி நடத்துவதாகச் சொல்லி இளம்பெண்களிடம் வசூல்செய்தது சம்பந்தமாக 10 நாட்களுக்குள் ஆஜராகி, போலீசிற்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என்ற நோட்டீசைக் கொடுத்துவிட்டுத் திரும்பியது மாநகர போலீஸ். இது எல்லாமே மீரா மிதுனின் வக்கீல் ஸ்ரீதர்மூலம்தான் நடந்தது. இந்த ஸ்ரீதர் யார் என்றால்... கமலின் "மக்கள் நீதி மய்யம் கட்சி' சார்பில் ஸ்ரீவில்லி புத்தூர் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டவர்.

ff

போலீஸ் நோட்டீஸ் கொடுத்த மூன்றாம் நாளே, அதாவது... ஜூலை.28-ஆம் தேதியன்று "பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டார் மீரா மிதுன். வெளியேறிய சூட்டோடு, "" "பிக்பாஸ்' வீட்டில் சேரன் என்னைத் தவறாகக்கையாண்டார் என்று சொல்ல மாட்டேன். ஆனால், மற்றவர்களின் கவனத் தைத் திசைதிருப்பி பெரிய நாடகம் ஒன்றை நடத்திவிட்டார். இதற்கான கர்மாவை சேரன் ஒரு நாள் எதிர் கொண்டே ஆக வேண்டும்'' என சேரன்மீது ஒரு தினுசாகப் புகார் கிளப்பினார் மீரா மிதுன்.

இப்படியெல்லாம் சூடு கிளப்பிக் கொண்டிருந்த சண்டை... மாடலிங்கும் நடிகையும், ஜோ மைக்கேல் ஆசியால் "மிஸ் சௌத் இந்தியா' பட்டத்தை வாங்கிய வருமான ஷனம் ஷெட்டியால் கவர்ச்சிச் சண்டையாக மாறியது. "அம்புலி' உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும், தெலுங்குப் படங்களில்தான் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஷனம் ஷெட்டி. ஜோ மைக்கேல் மூலம் போலீசை "பிக்பாஸ்' வீட்டுக் குள் அனுப்பி, மீரா மிதுனை அசிங்கப் படுத்தும் வேலையை கனகச்சிதமாக செய்து முடித்தி ருக்கிறாராம் ஷனம் ஷெட்டி. இதுல மேலும் ஒரு அதிமுக்கியமான சேதி என்னன்னா...

அதே "பிக்பாஸ்' வீட்டுக்குள் போட்டியாளராக இருக்கும் தர்ஷனை ரொம்ப டீப்பாக லவ் பண்ணுகிறார் ஷனம் ஷெட்டி. "" "பிக்பாஸ்' வீட்டுக்குள் 100 நாள் தங்கி... ஃபர்ஸ்ட் பிரைசைத் தட்டிச்செல்ல நினைத்த மீரா மிதுனின் ஆசையில் மண் விழுந்துருச்சு...'' என தனது நட்பு வட்டத்தில் சொல்லிச்சொல்லிச் சிரிக்கிறா ராம் ஷனம் ஷெட்டி. ஷனம் ஷெட்டியின் தூண்டுதலால்தான் "பிக்பாஸ்' வீட்டுக்குள் போலீஸ் நுழைந்தது குறித்துக் கேட்பதற்காக, ஷனம் ஷெட்டியைக் கடந்த 31-ஆம் தேதி மதியம் 2.25 மணிக்கு தொடர்பு கொண்டோம். "ஐ ஆம் இன் மீட்டிங். ஐ வில் கால் யூ பேக் லேட்டர்' என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார் நமக்கு. மீண்டும் இரவு 9.15 மணிக்குத் தொடர்பு கொண்டபோதும் அதே எஸ்.எம்.எஸ்.வந்தது.

அதுக்குமேல நாம என்ன செய்றது?

-ஈ.பா.பரமேஷ்வரன்

cine130819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe