Advertisment

கோலிவுட் கார்னர் - வால்டர்

/idhalgal/cinikkuttu/walter

ந்தியளவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களாகக் கொண்டாடப்படுபவர்களுள் ஒருவராக இருக்கும் நட்டி எனும் நட்ராஜ் சுப்பிரமணியம் தனது நடிப்பாலும் புகழைக் குவித்து வருகிறார். "சதுரங்க வேட்டை' தொடங்கி, வித்தியாசமான வேடங்களில் தனது சிறந்த நடிப்பைத் தந்துவரும் அவர், சமீபத்தில் சிவகார்த்திகேயனின் "நம்ம வீட்டு பிள்ளை'-யிலும் கலக்கியிருந்

ந்தியளவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களாகக் கொண்டாடப்படுபவர்களுள் ஒருவராக இருக்கும் நட்டி எனும் நட்ராஜ் சுப்பிரமணியம் தனது நடிப்பாலும் புகழைக் குவித்து வருகிறார். "சதுரங்க வேட்டை' தொடங்கி, வித்தியாசமான வேடங்களில் தனது சிறந்த நடிப்பைத் தந்துவரும் அவர், சமீபத்தில் சிவகார்த்திகேயனின் "நம்ம வீட்டு பிள்ளை'-யிலும் கலக்கியிருந்தார். தற்போது சிபிராஜ் நடிப்பில் உருவாகிவரும் "வால்டர்' படத்தில் இயக்குநர் கௌதம்மேனன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து அறிமுக இயக்குநர் யு. அன்பு நம்மிடம் பேசியபோது...

Advertisment

dd

"""வால்டர்' படத்தின் வெகு முக்கியமான பாத்திரத்திற்கு இயக்குநர் கௌதம் மேனனை அணுகியபோது, அவரது பிற படங்களை இயக்கும் பணிகளின் காரணத்தால், அவரது கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்துவராமல் போனதால் நட்டியை இக்கதா பாத்திரத்திற்கு அணுகினோம்.

"குவியும் வாய்ப்புகளுள் நல்லதை மட்டுமே செய்வேன்' என்ற கொள்கையில் அவர் இருந்தார். "கதையை முழுதாகக் கேட்ட பின்பே இப்படத்தில் நடிப்பதைப் பற்றிப் பேசமுடியும்' என்றார். கதை கேட்டதன் முடிவில் படத்தின்மீதும், அவரது பாத்திரம் மீதும் அவருக்கு பெரும் நம்பிக்கை வந்து, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். அவரது பாத்திரம் சம்பந்தமான காட்சிகளை 15 நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங் களில் படமாக் கியுள்ளோம்'' என்றார் ஸ்ருதி திலக் 11:11 புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் "வால்டர்' படத்தில் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படப்புகழ் ஷ்ரின் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்க, சமுத்திரகனி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

இசை- தர்மா பிரகாஷ், ஒளிப்பதிவு- ராசாமதி, படத்தொகுப்பு- எஸ். இளையராஜா, பாடல்கள்- அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி, கலை இயக்கம்- ஏ.ஆர். மோகன், நடனம்- தாஸ்தா, சண்டைப்பயிற்சி- விக்கி, தயாரிப்பு மேற்பார்வை- கே. மனோஜ் குமார்.

cini140120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe