Advertisment

வைகைப் புயலுக்கு மனப் பிறழ்வா?

/idhalgal/cinikkuttu/wake-storm

வைகைப் புயல் வடிவேலுவை வைத்து "எலிலி'ங்கிற படத்தை எடுத்த தயாரிப்பாளர் இப்ப எங்க இருக்காருன்னு தெரியல. வடிவேலுவின் ஃபேவரைட் டைரக்டரான சுராஜ் காம்பினேஷனில் விஷாலுடன் நடித்த "கத்திசண்டை'-யும் பெரிதாக எடுபடவில்லை.

Advertisment

vadivelu

ஆனால் நீண்ட நாட்களாக கதை சொல்லிலிக்கொண்டே வந்தார் வடிவேலுவுக்கு "இம்சை அர

வைகைப் புயல் வடிவேலுவை வைத்து "எலிலி'ங்கிற படத்தை எடுத்த தயாரிப்பாளர் இப்ப எங்க இருக்காருன்னு தெரியல. வடிவேலுவின் ஃபேவரைட் டைரக்டரான சுராஜ் காம்பினேஷனில் விஷாலுடன் நடித்த "கத்திசண்டை'-யும் பெரிதாக எடுபடவில்லை.

Advertisment

vadivelu

ஆனால் நீண்ட நாட்களாக கதை சொல்லிலிக்கொண்டே வந்தார் வடிவேலுவுக்கு "இம்சை அரசன் 23-ஆம் புலிலிகேசி' மூலம் பம்பர் ஹிட் கொடுத்த டைரக்டர் சிம்புதேவன். ஏகப்பட்ட திருத்தங்களுடன் கதையை ஓ.கே. பண்ணி ஒருவழியாக ஒத்துக் கொண்டார் வடிவேலு. சில கோடிகள் சம்பளத்திற்கும் ஓ.கே. சொன்னார் தயாரிப்பாளர் ஷங்கர்.

பலகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட்டுகள் போட்டு, "இம்சை அரசன் 24-ஆம் புலிலிகேசி' ஷூட்டிங்கை ஆரம்பிச்சாரு டைரக்டர் சிம்புதேவன். பத்து நாள் ஷூட்டிங் முடிஞ்சதும் சேட்டைய ஆரம்பிச்சாரு புயலு. ஏகப்பட்ட பேச்சுவார்த்தை நடந்தும் புயலு ஒத்துவராததால, தயாரிப்பாளர் கள் கவுன்சிலில் பஞ்சாயத்தைக் கூட்டினார் ஷங்கர். ரெண்டு தடவை புயலுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். "நான் கொடுத்த கால்ஷீட்டை வீணடிச்சதால எனக்குத்தான் பெருத்த நஷ்டம்'னு புலம்பினாரு புயலு. "அதெல்லாம் முடியாது. நீங்க நடிச்சுக் கொடுத்தே ஆகணும். இல்லேன்னா 9 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கணும்'னு தீர்ப்பு சொல்லிலிருச்சு கவுன்சில். "சரி நடிக்கிறேன் கூடுதலா 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கச் சொல்லுங்க'ன்னு மீண்டும் முருங்கை மரம் ஏறினாரு வைகைப் புயலு.

"அதெல்லாம் முடியாது. சொன்னா சொன்னதுதான், பேசியபடி நடிச்சுக் கொடு. இல்லேன்னா இனிமே நடிக்கவே முடியாதபடி ரெட் கார்டு போட்ருவோம்'னு கடைசி ஆயுதத்தை இப்போது கையில் எடுத்துருக்கு கவுன்சில்.

வைகைப் புயலுக்கு மனப் பிறழ்வாகிவிட்டதா என கோடம்பாக்கத்தில் "உச்' கொட்டு கிறார்கள்.

-பரமேஷ்

Advertisment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe