Advertisment

ஆளும்கட்சியுடன் விவேக் கூட்டணி!

/idhalgal/cinikkuttu/vivek-coalition-ruling-party

வையம் மீடியாஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.பி. விஜி தயாரித்து, இயக்கி இருக்கிற திரைப்படம் "எழுமின்.' தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்புக் கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

Advertisment

vivek

இந்த விழாவில் செய

வையம் மீடியாஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.பி. விஜி தயாரித்து, இயக்கி இருக்கிற திரைப்படம் "எழுமின்.' தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்புக் கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

Advertisment

vivek

இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, ஹிப்-ஹாப் ஆதி, இசையமைப்பாளர்கள் டி. இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய வி.பி. விஜி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,""இவ்வளவு மாணவர்கள் மத்தியில் இந்த விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது. நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர் பல நல்ல கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதினால் தான் வாழும் கலைவாணராக இருக்கிறார். வருகின்ற காலங்களில் இளைஞர்கள் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியமான கருத்தைக் கூறும் இந்தப் படம் வரவேற்பைப் பெறவேண்டும். இந்த "எழுமின்' திரைப்படம் இன்றைய தலைமுறைக் கான பாடமாக அமைய வேண்டும்.

தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படித்தான் சிலம்பாட்டமும். அதுவும் வீரத்தின் அடையாளமாக இருக்கிற ஒரு விளையாட்டுதான். நம் தமிழ் இளைஞர்கள் "எழுமின்' திரைப்படத்தை வெற்றி பெற வைக்கவேண்டும்'' என விவேக்கை குதூகலப்படுத்தினார் அமைச்சர்.

நடிகர் விவேக் பேசும்போது, ""தமிழ்நாட்டில் சமீபமாக பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகி இருக்கிறார் கள். "ஜல்லிக்கட்டு' போராட்டத்தை முன்னின்று நடத்தி வென்றுகாட்டிய மாணவர்கள்தான் அந்த உண்மை யான சூப்பர் ஸ்டார்கள். நான் நான்குபேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். முதலாவது, தன்னம்பிக்கையால் உயர்ந்த நடிகர் தனுஷுக்கு. நான் கேட்டவுடன் மறுக்காமல் வந்து ஒரு பாடலைப் பாடிக் கொடுத்திருக்கிறார்.

இரண்டாவது, இசையமைப்பாளர் அனிருத்திற்கு. மூன்றாவது நன்றி, இசையமைப்பாளர்கள் ஆதி மற்றும் இமான் இருவருக்கும்'' என்று கடகடவென நன்றி தெரிவித்து சுருக்கமாய் முடித்துக்கொண்டார்.

பிஸாஸ்டிக் ஒழிப்பு விளம்பரத் தூதராக நடிகர் விவேக்கை முதல்வர் எடப்பாடி நியமித்ததன் எஃபெக்ட் விழாவில் தெரிந்தது.

cine040918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe