Advertisment

விஷால் பெருமிதம்! எச்சரிக்கை!

/idhalgal/cinikkuttu/vishal-proud-warning

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேண்டர்ன் பிரிவியூ திரையரங்கில் 22-5-2018 அன்று மாலை ஆறு மணிக்கு எளிமையாகவும் இனிமையாகவும் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான விஷால் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் .

Advertisment

vishal

சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ். கார்

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேண்டர்ன் பிரிவியூ திரையரங்கில் 22-5-2018 அன்று மாலை ஆறு மணிக்கு எளிமையாகவும் இனிமையாகவும் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான விஷால் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் .

Advertisment

vishal

சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ். கார்த்திக் வரவேற்புரை வழங்கினார்.

தலைவர் டி.ஆர். பாலேஷ்வர், துணைத்தலைவர் டி.ஆர். ராம் பிரசாத் என்கிற பிரபு, பொருளாளர் மதி, ஒளிகுமார், இணைச் செயலாளர் ம. அண்ணாதுரை, கௌரவ ஆலோசகர்கள் நெல்லை சுந்தர்ராஜன், மேஜர்தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு ஒளிர்வண்ண போர்த்துதல் ஆடை அணிவித்து வரவேற்றனர். முதல் அடையாள அட்டையை மூத்த பத்திரிகையாளர் நெல்லை பாரதிக்கு வழங்கிய விஷால், கடைசி உறுப்பினர் வரைக்கும் கனிவோடு வழங்கி, சங்கத்துக்குப் பெருமை சேர்த்தார்.

Advertisment

பத்திரிகையாளர்கள்மீது கொண்டுள்ள பாசத்தையும், நாட்டு நடப்பின் மேலான கோபத்தையும் அக்கறையோடு பதிவு செய்த விஷாலின் பேச்சு-""மதிப்புக்குரிய கலை யுலகத்தைச் சார்ந்த, நமது குடும்பத்தைச் சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் vishalகொள்கிறேன். என்றைக்குமே உங்களை நான் பத்திரிகை யாளர்களாகப் பார்த்தது இல்லை.

என்னுடைய அப்பா, அம்மாவுக்குப் பிறகு நான் பயந்தது உங்களுக்குதான். ஸ்கூல், காலேஜுக்கு அனுப்பும்போது "ஒழுங்காக படி, நல்ல விஷயங் களைக் கற்றுக்கொள்' என்று அப்பா, அம்மா ஆலோசனை சொல்லிலி வளர்த்ததுபோல, சினிமாத்துறையில் "ஒரு நடிகனாக நன்றாக நடி, கிசுகிசு வந்துவிடாமல் நடி, நல்லது செய்' என்று வழிகாட்டியாக இருக்கும் உங்களைத்தான் நான் அதிகமாக மதிக்கிறேன். என் சிந்தனையில் உங்களைத்தான் ஏற்றிவைத்துக்கொண்டு செயல்படுகிறேன். அதை என்றைக்குமே மறக்க மாட்டேன்'' என டச்சிங்காகப் பேசினார்.

மேலும், ""தூத்துக்குடி சம்பவத்துக்காக இங்கே மவுன அஞ்சலி செலுத்தினோம். அது நல்ல விஷயம். நாடு தவறான பாதையில் போய்க்கொண்டி ருக்கிறது. இதற்கும் மேல் நாம் வேடிக்கை பார்க்க முடியாது. இனிமேல் இளைஞர்கள் களத்தில் இறங்கி ஒரு முடிவு கட்டினால்தான் உண்டு என்று நினைக்கிறேன்.

இந்த மேடையில் உங்களை வைத்து ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இதுக்கும்மேலேயும் தமிழக அரசும் மத்திய அரசும் சைலண்டா இருந்தா என்ன நடக்கும் என்பதே தெரியாது!''

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe