பிசிம்ஹான்னு ஒரு நடிகர். ஆந்திராவைச் சேர்ந்த இவர், தமிழில் நடித்து ஹிட்டான ஒரே படம் "ஜிகர்தண்டா'தான். ஒரு படம் ஓடுன உடனேயே அந்த நடிகனின் வீட்டு வாசலில் தவம் கிடப்பதும், அவர் கேட்கும் சம்பளத்தை அள்ளி வழங்குவதும் நம்ம தயாரிப்பாளர்களின் வியாதியாச்சே! அந்த வியாதிப்படி பலர் பாபி சிம்ஹாவை தேடி ஓடினார்கள்.

Advertisment

அவரை வைத்து படம் எடுத்து சினிமா தொழிலையே விட்டுவிட்டு ஓடினார்கள். அப்படி ஓடியவர்களுள் ஒருவர்தான் "தொட்ரா' படத்தின் தயாரிப்பாளர்.

babisimha

சன் பிக்சர்ஸ், ரஜினி, கார்த்திக் சுப்புராஜ் என்பதால் "பேட்ட'’ படத்தில் மட்டும் தனது வாலைச் சுருட்டிக்கொண்டு நடித்தார் பாபி சிம்ஹா. கடந்த வாரம் மாஜி ஹீரோயின் மதுபாலா நடித்த "அக்னி தேவி' படம் ரிலீசானது. படத்தைத் தயாரித்தவர் கோவையைச் சேர்ந்த ஸ்டாலின். க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை, முறைப்படி வாங்கித்தான் "அக்னி தேவி'-யை எடுத்தனர். இந்தப் படத்தில் நடிப்பதற்கு பாபி சிம்ஹாவின் 25 நாள் கால்ஷீட்டுக்கு 60 லட்சம் சம்பளம் (இந்தக் கேவலத்தை எங்க போய் சொல்றது?) பேசி ஒப்பந்தம் போட்டனர்.

Advertisment

பதினைந்து நாட்கள் முடிந்ததும், தனது சைக்கோ சேட்டையை ஆரம்பித்தார் பாபி. டைரக்டரை பாடாய்ப்படுத்தினார். அதனால் பாபி சிம்ஹா போன்ற ஒருவரின் முதுகுப்பகுதியை மட்டும் காட்டி படத்தை முடித்துவிட்டனர்.

இதனால் கடுப்பான பாபி சிம்ஹா அந்தப் படம் ரிலீசாவதற்கு இரண்டு நாட்கள்முன்பு, பட ரிலீசுக்கு ஸ்டே வாங்கிவிட்டதாக கோர்ட் ஆர்டர் ஒன்றைக்காட்டினார். பாபி சிம்ஹாவின் இந்த அடாவடியைக் கண்டிக்க தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து கூடியது.

babisimha

Advertisment

அப்போது இருந்த சங்க நிர்வாகிகளை ரவுடிகள்போல ஒருமையிலும் ஏடாகூடமாகவும் பேசி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி னார் பாபி சிம்ஹா.

இதுகுறித்து சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் தயாரிப்பாளர் கஸாலி யிடம் நாம் கேட்ட போது, ""போலியான கோர்ட் ஆர்டரைக் காண்பிச்சதுக்கே பாபி சிம்ஹா மேல கிரிமில் வழக்குப் போடவேண்டும். அந்த போலிலி ஆர்டரைக் காண்பித்து ரிலீஸ் நேரத்தில் குழப்படி பண்ணியதால், பாபி சிம்ஹாமீது "அக்னி தேவி'-யின் தயாரிப்பாளர் ஸ்டாலிலின் நஷ்டஈடு கேட்டு வழக்குப் போடவேண்டும். இந்தமாதிரி அடாவடி நடிகர்களுக்கு நிரந்தர ரெட் கார்டு போடவேண்டும்'' என கோப எரிமலையாய் வெடித்தார்லி.

-பரமு