Advertisment

வாழ்வில் வீசிய வசந்தம்'' -வில்லன் நடிகர் நெகிழ்ச்சி!

/idhalgal/cinikkuttu/villain-actor-elasticity

மிழ் சினிமாவில் சுமார் 20 வருடங் களாக நடிகராக வலம் வந்துகொண்டிருப் பவர் சம்பத்ராம். ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும், சம்பத் ராமுக்கு தற்போது திருப்புமுனையாக அமைந்திருக்கும் படம் "திமிரு புடிச்சவன்.'

Advertisment

villanactorவிஜய் ஆண்டனி தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் "திமிரு புடிச்சவன்' தற்போது வெளியா

மிழ் சினிமாவில் சுமார் 20 வருடங் களாக நடிகராக வலம் வந்துகொண்டிருப் பவர் சம்பத்ராம். ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும், சம்பத் ராமுக்கு தற்போது திருப்புமுனையாக அமைந்திருக்கும் படம் "திமிரு புடிச்சவன்.'

Advertisment

villanactorவிஜய் ஆண்டனி தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் "திமிரு புடிச்சவன்' தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில், சம்பத்ராம் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருக்கிறார். சம்பத்ராமுக்கு போலீஸ் வேடம் புதிதல்ல என்றாலும், இதில் படம் முழுவதும் வரும் முக்கியமான வேடம் கிடைத்திருக்கிறது.

Advertisment

இதுபோன்ற முக்கியத்துவம்வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகினர் மனதிலும் நிறையவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

ரஜினியின் "கபாலிலி' படத் தைத் தொடர்ந்து "திமிரு படத்தில் நல்ல வேடத்தில் நடித்திருக்கும் சம்பத், "தட்றோம் தூக்குறோம்' உள்ளிட்ட சில படங்களில் மெயின் வில்லனா கவும் நடித்திருக்கிறார்.

வெற்றிமாறன் தயாரிப்பில், மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் "சங்கத் தலைவன்' மற்றும் "காஞ்சனா-3' ஆகிய படங்களிலும் முக்கிய மான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

""பிரகாஷ்ராஜ், நாசர் போன்றவர்களைப்போல வில்லனாக நடிப்பில் பெயர் எடுக்கவேண்டும் என்பதுதான் எனது நீண்டநாள் ஆசை. இதற்காக நான் பல வருடங்களாக போராடி வருகிறேன். இன்னமும் போராட தயாராகவே இருக்கிறேன்.

எனது ஆசையை நான் பல முன்னணி இயக்குநர்களிடம் கூறி வாய்ப்பும் கேட்டுவருகிறேன்.

அப்படி நான் பெற்ற வாய்ப்புதான் "திமிரு புடிச்சவன்.' என்னைப் புரிந்துக்கொண்டு விஜய் ஆண்டனி சாரும், இயக்குநர் கணேஷாவும் கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறேன் என்று நம்புகிறேன். படம் வெளியான பிறகு பலர் போன்செய்து எனக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார் கள். இந்த வாழ்த்து பல படங்களுக்கு தொடரவேண்டும் என்பது தான் எனது ஆசை. நிச்சயம் அது நடக்கும் என்றே நம்புகிறேன்'' என மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் சம்பத்ராம்.

cine181218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe