டிகர் கார்த்தியின் "உழவன் ஃபவுண்டேஷன்' சார்பில், தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பவர்களுக்கு உழவர் விருதும், ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தற்சார்பு வேளாண்மை யில் நேரடி விற்பனையில் சிறந்து விளங்கும் விவசாயி திருமூர்த்தி, பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பில் ஜனகன், சிறந்த விவசாயப் பங்களிப்பிற்கு மனோன்மணி ஆகியோருக்கு விருதும் தலா ஒரு லட்சத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் நடிகர் சிவகுமார் வழங்கினார்.

karthi

அதோடு சிறு, குறு விவசாயிகளுக்குப் பயன்படும்வகையில் கருவிகளை வடிவமைப்பவர்களுக்கான போட்டியில் வெற்றிபெற்றவர்க்கு முதல் பரிசாக உடுமலைப்பேட்டை சசிகுமாருக்கு 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக வேலூர் ராஜா மற்றும் கரூர் துரைசாமிக்கு 25 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ஈரோடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோகுல் மற்றும் நண்பர்களுக்கு 25 ஆயிரமும், சிறப்புப் பரிசாக புதுக்கோட்டை பள்ளி மாணவர் சுபாஷ் சந்திர போசுக்கு 25 ஆயிரம் பரிசுத் தொகை, விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கார்த்தி பேசும்போது ""விவசாயிகளைக் கௌரவப் படுத்தி அங்கீகரிக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒரு விவசாயி தற்கொலை என்பது அந்த குடும்பத்திற்கு மட்டும் அல்ல; அது சமுதாயத்திற்கே பெரும் இழப்பு'' என்றார் வேதனையுடன்.

Advertisment

தனது மாமனார் ஊரான ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள குமாரசாமி கவுண்டன்பாளையம் கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடினார் கார்த்தி. வேட்டி, சட்டை அணிந்து, காலில் செருப்பு இல்லாமல் பயபக்தியுடன் முளைப்பாரி ஏந்தி வந்து காளிங்கராயன் கால்வாய் ஆற்றில் கரைத்தார். அந்த கிராமமே கார்த்தியைப் பாராட்டியது.