"தாதா 87' படத்தை டைரக்ட் செய்த இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்துவருகிறார். நடிகர் விக்ரமின் மருமகன் (தங்கை அனிதாவின் மகன்) அர்ஜூமன், "பிக்பாஸ்' ஜூலி, மொட்ட ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறன்றனர்.

Advertisment

ddaf

தற்போது படத்தில் மேலும் மூன்று நடிகைகள் இணைந்திருக் கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த அனித்ரா நாயர், பெங்களூரைச் சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சாந்தினி ஆகியோர்தான் அந்த மூன்று நடிகைகள். மிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறதாம்.

பி.ஆர்.ஓ. நிகில்முருகன்மூலம் டைரக்டர் விஜய் ஸ்ரீஜியிடம் அறிமுகமாகியிருக்கிறார் அர்ஜுமன். சினிமாவிற்காக நடிப்பு, நடனம் இவற்றுடன் குதிரை யேற்றம், வாள் வீச்சுப் பயிற்சியையும் கற்றிருக்கிறார் அர்ஜுமன். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்து, இரண்டாம் கட்ட ஷூட்டிங் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று ஆரம்பமாகியுள்ளது.