"ஹரஹர மகாதேவகி', "இருட்டு அறையில் முரட்டுக் குத்து' மாதிரியான கசமுசா படங்களில் நடித்தாலும் நிக்கி கல்ராணியால் நிலையான மார்க் கெட்டைப் பிடிக்க முடியவில்லை. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் நிக்கி கல்ராணிக்காக சில டைரக்டர்களிடம் பேசிப் பார்த்தார். நிக்கிக்காக ஞானவேல்ராஜா ஏன் சிபாரிசு பண்ணனும் எனக் கேக்குறீங்களா? அந்த சமாச்சாரம் நமக்கு என்னத்துக்குங்க?
நிக்கி கல்ராணி எவ்வளவோ, எப்படியோ முயற்சி செய்தும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க முடியவில்லை. விக்ரம் பிரபுவும் ராகவா லாரன்ஸும்தான் நிக்கி ஜோடி போட்ட பெரிய ஹீரோக்கள். அதிலும் விக்ரம் பிரபுவுடன் "நெருப்புடா', "பக்கா' என இரண்டு படங்களில் ஜோடி போட்டார் கல்ராணி. அந்த இரண்டு படங்களும் செமத்தியா ஊத்திக்கிச்சு.
படம் ஊத்திக்கிட்டாலும் விக்ரம் பிரபுவும் நிக்கி கல்ராணியும் செம பக்காவாக நெருக்கமானார்கள். இரண்டு பட ஊத்தலால் விக்ரம் பிரபுவுக்கும் பெரிசாக வாய்ப்பு இல்லை. இந்த நேரத்தில்தான் சமீபத்தில் ரிலீசான ராதா மோகனின் "60 வயது மாநிறம்' நல்ல ரிசல்ட்டும் விக்ரம் பிரபுவுக்கு நல்ல பேரும் கிடைத்தது. மாநிறம் எஃபெக்டோ என்னவோ, "துப்பாக்கிமுனை' என்ற விக்ரம் பிரபுவின் படத்திற்குத் தொடர்ச்சியாக விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கிறது.
இதையெல்லாம் கணக்குப் போட்ட நிக்கி கல்ராணி "உங்க படத்துல எனக்கும் சான்ஸ் வாங்கிக் கொடுங்க' என விக்ரம் பிரபுவை நச்சரித்து வருகிறாராம். "அம்மா தாயே ஆளவிடு' என தெறித்து ஓடுகிறாராம் விக்ரம் பிரபு.
அந்தக் கதை அப்படின்னா, டி. சிவா தயாரித்திருக்கும் "சார்லிலி சாப்ளின்-2' பட புரோம பிரஸ் மீட்டை சென்னை மகாலிங்கபுரத்தில் இருக்கும் தனது வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார் படத்தின் மியூஸிக் டைரக்டர் அம்ரீஷ். டைரக்டர் ஷக்தி சிதம்பரம், டி. சிவா, ஆகியோர் ஆஜரானார்கள், நிக்கி கல்ராணி மட்டும் ஆப்சென்டாகி, சிவாவை அப்செட்டாக்கிவிட்டார்.