Advertisment

விக்ரம் எனது குரு -ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கம்!

/idhalgal/cinikkuttu/vikram-my-guru-iswarya-rajesh

"வடசென்னை', "கனா' என ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட்டில் ஹிட் மழைதான். இப்போது தெலுங்கு ஃபீல்டிலும் இறங்கிட்டார்.

இனிமேல் ஐஸ் பேசுகிறார்.

Advertisment

Iswarya Rajesh. Iswarya Rajesh.

""தெலுங்கில் நடிக்கக்கேட்டு நிறைய ஆஃபர்ஸ் வந்துக்கிட்டே இருந்தது. மனசுக்கு பிடிச்ச கேரக்டர் அமையறப்ப பண்ணலாம்னு இருந்தேன். ஒரு ஃப்ங்ஷன்ல டோலிவுட் டைரக்டர் கரந்தி மாதவ்வை பார்த்தேன். ஒரு

"வடசென்னை', "கனா' என ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட்டில் ஹிட் மழைதான். இப்போது தெலுங்கு ஃபீல்டிலும் இறங்கிட்டார்.

இனிமேல் ஐஸ் பேசுகிறார்.

Advertisment

Iswarya Rajesh. Iswarya Rajesh.

""தெலுங்கில் நடிக்கக்கேட்டு நிறைய ஆஃபர்ஸ் வந்துக்கிட்டே இருந்தது. மனசுக்கு பிடிச்ச கேரக்டர் அமையறப்ப பண்ணலாம்னு இருந்தேன். ஒரு ஃப்ங்ஷன்ல டோலிவுட் டைரக்டர் கரந்தி மாதவ்வை பார்த்தேன். ஒரு கதையை சொன்னார். இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்துச்சு. அதுல விஜய்தேவரகொண்டா ஹீரோ. படத்துல மொத்தம் மூணு ஹீரோயின்ஸ். என் ரோல் பிடிச்சதால உடனே நடிக்கறேன்னு சொல்லிட்டேன். அதோட ஷூட் இம்மாதம் தொடங்குது.

தமிழ்லயும் நிறைய படங்கள் போயிட்டிருக்கு. விக்ரம் சாரோட நடிக்கற "துருவ நட்சத்திரம்'ல இன்னும் பத்து நாட்கள் பேலன்ஸ் இருக்கு. விக்ரம் சாரை மரியாதைக்குரிய ஒரு குருவா பாக்கறேன். ஸ்வீட் பர்சன். என் வெல் விஷர். எதைப்பத்தி கேட்டாலும் சரியா வழிகாட்டுவார்.

இண்டஸ்ட்ரீல எல்லாருக்குமே என்னைப் பிடிக்கும். லைஃப்ல எதிரிகளே இருக்கக்கூடாது. இதுதான் என் பாலிசி. எல்லார் கிட்டயும் ஒரேமாதிரி நேர்மையா பழகறதால என்னை எல்லார்க்கும் பிடிக்குதுனு நினைக் கறேன்.

எப்பவும் மனசுல ஒண்ணு வச்சு, வெளியே ஒண்ணு பேசறதில்ல. கதை கேட்கறப்ப அது வேறொரு ஹீரோயினுக்கு "மேட்ச்' ஆகும்னு தோணினா உடனே அந்த நடிகைகிட்ட சொல்லிடுவேன். அப்படி பலரை கதை கேட்கவும் வைச்சிருக்கேன். ஒருவேளை இந்த குணம் மத்தவங்களை ஈர்த்திருக்கலாம்!

Iswarya Rajesh.

"மீ டூ'-வைப் பொறுத்த வரை வடசென்னை பத்மா மாதிரி தைரியமான பொண்ணு. எனக்கு ஒரு பையனை பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்குனு சொல்லுவேன்.

பிடிக்கலைனா, பிடிக்கலைனு சொல்லுவேன்.

நடிக்க வர்றதுக்கு முன்னாடி ஷேர் ஆட்டோல போகும்போது ஒருத்தன் என் இடுப்புல கை வச்சான்.

அவனை அங்கயே செருப்பை கழட்டி செவுலுல நாலு சாத்து சாத்தினேன். தெறிச்சு ஓடிட்டான்! மத்தபடி "மீ டூ' சர்ச்சைகளை சம்பந்தப்பட்டவங்களோட பர்சனல் விஷயமாதான் பாக்கறேன். அதுல நான் சொல்றதுக்கு எதுவுமில்ல!'' என ஓப்பனாக பேசினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

cine120219
இதையும் படியுங்கள்
Subscribe