"பண்ணையாரும் பத்மினியும்', "சேதுபதி' என விஜய்சேதுபதியை வைத்து இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த எஸ்.யூ. அருண்குமார், மூன்றாவது முறையாக "சிந்துபாத்' மூலம் விஜய்சேதுபதியுடன் கை கோர்த்து முக்கால்வாசிக்கும்மேல் படத்தையும் எடுத்து முடித்துவிட்டார். விஜய்சேதுபதிக்கு ஜோடிபோடும் அஞ்சலிக்கு வலுவான கேரக்டராம். இந்தப் படம் தனக்கு ரொம்பவும் கைகொடுக்கும், மார்க்கெட்டும் சூடுபிடிக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் இருக்கிறார் அஞ்சலி.

v

வி. சேதுபதிக்கும் அஞ்சலிக் கும் இடையிலான லவ் சீன்கள் சூப்பராக வந்திருக்காம். இப்படத்தில் இன்னொரு சூப்பர் சங்கதி என்னன்னா விஜய்சேதுபதியின் 14 வயது மகன் சூர்யா இப்படத்தின்மூலம் அறிமுகமாகிறார். படம் முழுக்க சூர்யா வருவதுபோல் கேரக்டரை டிசைன் பண்ணியுள்ளாராம் அருண் குமார். யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.