விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ், ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன் ஸூடன் இணைந்து "சென்னை பழனி மார்ஸ்' என்கிற படத்தை இயக்கி யுள்ளார் இயக்குநர் பிஜூ.
படம் குறித்த தகவல்களைப் படக்குழுவினருடன் இணைந்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் பிஜூ.
""நான்கு சண்டைக்காட்சிகள் கொண்ட படம். ஹீரோயிஸ மான படங்களும் இங்கு வேண்டும். "சென்னை பழனி மார்ஸ்' மாதிரி புதுமுகங்கள் நடித்த படங்களும் வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijaysethpathi_2.jpg)
நண்பர்கள் இருவர் சேர்ந்து சென்னையிலிருந்து பழனிவழியாக மார்ஸ் போகமுடியுமான்னு முயற்சி பண்றாங்க. அது ஒரு தந்தையின் கனவாக இருந்தது. தந்தையைத் தொடந்து அவரது பையன் அந்தக் கனவை நூல் பிடித்துப் போகிறான்.
அவனுடன் நண்பனும் சேர்ந்துகொள்ள, பயணம் சென்னையிலிருந்து பழனியை நோக்கித் தொடங்குகிறது.
மார்ஸை நோக்கிய பயணம் என்பதால், இது சயின்ஸ் ஃபிக்ஷன் படமோ கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த காலச்சக்கர பயணம் குறித்த படமோ அல்ல.
இந்தப் படம் நல்லபடியாக வெளிவரவேண்டும் என்பதற்காக ஒரு நண்பராக, ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு எனக்கு பட வெளியீட்டுப் பணிகளில் மிகுந்த உதவியாக இருந்துவருகிறார். ஒரு சீனில் கூட விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கவில்லை ஆடியோ வெளியாகி உள்ளது. படம் வரும் ஜூலை மாதத்தில் வெளியாக இருக்கிறது'' என்கிறார் இயக்குநர் பிஜூ .
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/vijaysethpathi-t.jpg)