லோகேஷ் கனக ராஜ் டைரக்ஷனில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு, அருள்தாஸ், ஸ்ரீமன், வி.ஜே.ரம்யா என மெகா காம்பினேஷனில் விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது "மாஸ்டர்'. இப்படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கும் விஜய், கஞ்சா மற்றும் போதை வஸ்துகளுக்கு அடிமையான மாணவர்களை அவர்கள் வழியிலேயே சென்று திருத்துவதோடு, போதை சப்ளை செய்யும் கும்பலையும் குளோஸ் பண்ணுவதுதான் "மாஸ்டர்' -வேலை.

vv

இந்தியத் தலைநகரான டெல்லியில் புகழ்பெற்ற ஸ்ரீராம் ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜில்தான் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

அதன்பின் சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் ஷூட்டிங் நடந்து முடிந்தபின் திட்டமிட்டே சிலரை வைத்து பிரச்சினையைக் கிளப்பினார்கள். அதன்பின் சென்னை நகருக்குள் சில இடங்களில் ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்துவிட்டு, கடைசி நேரத்தில் டேக்கா கொடுத்து கடுப்பைக் கிளப்பினார்கள் அரசு அதிகாரிகள். அதனால் கர்நாடக மாநிலம் ஷிமோகவிற்கு ஷிஃப்ட் ஆனது "மாஸ்டர்' படக்குழு.

Advertisment

vv

சரி அதெல்லாம் இருக்கட்டும்; சமீபத்தில் விஜய் வைத்த செம "ஹாட்' பொங்கல் மேட்டருக்கு வருவோம்.

அதாகப்பட்டது... விஜய்யின் அப்பாவான டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர், "இதுதான் எனது கடைசிப் படம்' எனச் சொல்லி "கேப்மாரி' என்ற மாபெரும் காவியத்தைப் படைத்து 2019 டிசம்பர் மாதம் ரிலீசும் செய்தார். ஜெய்- அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் மின்னிய அந்தப் படத்தில் எஸ்.ஏ.சி. சொல்லியதெல்லாம் ஷகிலா டைப் சங்கதிகள்தான்.

Advertisment

"பிகில்' ரிலீஸ் பிஸி, ரிலீசுக்குப் பிந்தைய பஞ்சாயத்து பிஸி, அதற்கடுத்து, "மாஸ்டர்' படத்தின் ஷூட்டிங் ஸ்டார்ட்டிங் பிஸி என தொடர்ச்சியாக பிஸியாக இருந்ததால், தனது அப்பாவின் காவியத்தைக் காணவோ, கேள்விப்படவோ விஜய்க்கு நேரமில்லை. சமீபத்தில் விஜய்யை சந்தித்த நெருங்கிய நட்பு வட்டம், "கேப்மாரி' பற்றி வசைமாரி பொழிந்திருக்கிறார்கள்.

சில நாட்கள் கழித்து தனது அப்பாவை அழைத்த விஜய், "வயசான காலத்துல உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. உங்க பேர் சொல்லும் அளவுக்கு படங்கள் எடுத்துட்டு, இப்ப பேரைக் கெடுக்குற அளவுக்கு படம் எடுக்கணுமா? அதுவும் என்னோட கடைசிப் படம்னு சொல்லிட்டு, இப்படிப்பட்ட கண்றாவிப் படத்தை எடுத்திருக்கீங்க!

vv

ஆத்மார்த்தமான படங்கள் எடுங்க... விருது கள் வாங்குங்க... அதுதான் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்' என தந்தைக்கு "ஹாட்' பொங்கல் வைத்திருக் கிறார் தனயன் விஜய்.

பொங்கலும் ஹாட், மேட்டரும் ஹாட்டா இருக்கா?

-ஈ.பா. பரமேஷ்வரன்