மெரிக்காவில் படித்துவிட்டு தமிழகம் திரும்பும் விஜய், இங்கே புதிய அரசியலுக்கான மாற்றத்திற்காக போராடுகிறார். அதனால் இங்கிருக்கும் அரசியல்வாதி வில்லன்களான ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் மெயின் வில்லிலியான வரலட்சுமியுடன் மோதுகிறார். இதுதான் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் "சர்கார்' என்பதை 2018 ஜூலை 10 "சினிக்கூத்து' இதழிலேயே எழுதியிருந்தோம். நாம் சொன்னது மாதிரியே இப்போது அமெரிக்காவில் ஷூட்டிங் நடந்துவருகிறது.

Advertisment

vijay

விஜய் அமெரிக்காவிற்கு கிளம்புவதற்குமுன்பு, தனது நற்பணி இயக்கத்தின் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தைக் கூப்பிட்டு இயக்கத்தின் கிளை அமைப்புகளை வலுப்படுத்தி, ஒன்றியம், நகரம் ஆகியவற்றுக்கு செயலாளர்களை நியமிக்க லிலிஸ்ட் ரெடி பண்ணச் சொல்லிலியுள்ளாராம். எல்லா ஏற்பாடுகளும் பக்காவாக முடிந்தபின், "சர்கார்' ரிலீசையொட்டி, பெரிய அளவில் ரசிகர்கள் மாநாடு நடத்தும் திட்டமும் வைத்திருக்கிறா ராம் விஜய்.

-பரமேஷ்