Advertisment

ஏ.ஜி.எஸ்.சைத் தெறிக்கவிட்ட அட்லீ! விஜய் பட வில்லங்கம்!

/idhalgal/cinikkuttu/vijays-film

ஏ.ஜி.எஸ். இன்டர்நேஷனல் பேனரில் கல்பாத்தி அகோரம் பிரதர்ஸ் தயாரிக்கும் விஜய் யின் 63-ஆவது படத்தைத் டைரக்ட் பண்ணிவருகிறார் அட்லீ. நயன்தாரா தான் ஹீரோயின். தீபாவளி ரிலீஸ் ப்ளானுடன் மொத்தம் 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார

ஏ.ஜி.எஸ். இன்டர்நேஷனல் பேனரில் கல்பாத்தி அகோரம் பிரதர்ஸ் தயாரிக்கும் விஜய் யின் 63-ஆவது படத்தைத் டைரக்ட் பண்ணிவருகிறார் அட்லீ. நயன்தாரா தான் ஹீரோயின். தீபாவளி ரிலீஸ் ப்ளானுடன் மொத்தம் 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் விஜய். சென்னை ஈ.வி.பி. ஸ்டுடியோவில் எட்டு கோடி ரூபாய்க்கும்மேல் செலவில் ஃபுட்பால் ஸ்டேடியம் செட் போடப் பட்டு, பாதிக்கும்மேல் ஷூட்டிங் முடிந் திருக்கிறது.

Advertisment

cc

இந்த நிலையில் மேலும் 30 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என கேட்டிருக்கிறார் அட்லீ. ஆனால் விஜயோ யோசிக்கிறாராம். மேலும் 30 நாள் கால்ஷீட் என்றால், போட்ட பட்ஜெட்டைவிட பல மடங்கு எகிறுமே என ஷாக் ஆகியிருக் கிறார் படத்தின் எக்ஸ்கியூடிவ் கன்ட்ரோலரான கல்பாத்தியின் மகள் அர்ச்சனா.

இதே விஜயின் "மெர்சல்' படத்தின் பட்ஜெட்டை எக்குத் தப்பாக எகிறவைத்து தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளியைத் தெறிக்க விட்டவர் தான் இந்த அட்லீ.

நமக்கென்ன வந்துச்சு, கோடி களைக் கொட்டி வச்சிருக் கிறவுக பாடு. இதுபோக இன்னொரு நியூஸ் என்னன்னா... ஷூட்டிங் ஸ்பாட் முழுவதும் 40 பவுன்சர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப் பட்டிருக்கிறார்கள். இவர் களில் யாராவது ஒரு பவுன்சர், விஜயிடம் பேசினாலோ, நெருக்க மாக நின்றாலோ, மறுநாள் அவர்கள் டிஸ்மிஸ்ஸாம்.

-பரமேஷ்

Advertisment
cine110619
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe