சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் டைரக்ஷனில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும்மேல் முடிந்துவிட்ட நிலையில், படத்துக்கு இன்னும் பெயர் வைக்க
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் டைரக்ஷனில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும்மேல் முடிந்துவிட்ட நிலையில், படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விஜய்க்கு ஜோடி போடுகிறார் கீர்த்தி சுரேஷ். பக்கா அரசியல் கதையாக இருக்கும் இப்படத்தில் பிரபல அரசியல்வாதிகளான ராதாரவியும் பழ. கருப்பையாவும் விஜய்க்கு வேட்டு வைக்கும் அரசியல்வாதிகளாகவே வருகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/varalakshmi_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay_1.jpg)
மேற்படி ரெண்டு ஆம்பள அரசியல் வாதிகள் போதாதுன்னு செம கெத்தாக ராவடி பண்ணும் பெண் அரசியல்வாதி கேரக்டரில் வருகிறார் வரலட்சுமி. ஜெயலலிதா ஆட்சியில் விஜய்யும் அவர் அப்பாவும் ரொம்பவே நொம்பலப்பட்டார்கள். 15 ஆண்டுகள் தனது மனசுக்குள் இருந்த கடுப்பையும் கசப்பையும் அப்படியே இந்தப் படத்தில் எக்ஸ்போஸ் பண்ணியிருக்கிறார் விஜய். ஜெயலலிதா- சசிகலா என இரண்டும் கலந்த கலவையாக இப்படத்தில் வரும் வரலட்சுமி, விஜய்க்கு செம குடைசல் கொடுக்க, பதிலுக்கு விஜய் எகிறி அடித்து, ஜெ.வை ஓடஓட விரட்டுவதுதான் கதையாம்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us