Advertisment

எக்ஸ்ளூசிவ்!-1 விஜய்யின் "சர்கார்'

/idhalgal/cinikkuttu/vijay-sarkar

நிஜ ஃபைட் ரணகளம்!

vijay

ன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் விஜய்யின் படம் "சர்கார்.' ஏ.ஆர். முருகதாஸ் டைரக்ட் பண்ணும் படம். பக்கா அரசியல் கதைப் படம்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதான். சில சீன்கள் லீக்கானதும் தெரிஞ்ச சங்கதிதான்.

Advertisment

தெரியாத சங

நிஜ ஃபைட் ரணகளம்!

vijay

ன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் விஜய்யின் படம் "சர்கார்.' ஏ.ஆர். முருகதாஸ் டைரக்ட் பண்ணும் படம். பக்கா அரசியல் கதைப் படம்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதான். சில சீன்கள் லீக்கானதும் தெரிஞ்ச சங்கதிதான்.

Advertisment

தெரியாத சங்கதி என்னன்னா, விஜய்யை வில்லன் ஆட்கள் பைக்கில் துரத்துவதுபோல சேஸிங் காட்சிகளை சென்னையின் பல பகுதிகளிலும் இரவு நேரங்களில் எடுத்தார்கள். விஜய்யை பைக்கில் துரத்துவதற்கு நிறைய இளைஞர்கள் தேவைப்பட்டதால், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களை வரவழைத்துள் ளனர். ஸ்டண்ட் நடிகர்களுடன் மாணவர்களும் கலந்து சேஸிங் சீன்களில் மிரட்டலாக விரட்டியுள்ளனர்.

Advertisment

vijay

சென்னை அண்ணாசாலையில் இரவு நேர ஷூட்டிங் பிரேக்கில், கல்லூரி மாணவர்களைப் பார்த்து, ஸ்டண்ட் நடிகர்கள் சிலர், ""நாங்கெல்லாம் காலம் காலமா உயிரைக் குடுத்து ஸ்டண்ட் பண்றோம். நீங்க என்னடான்னா முன்னூறு, நானூறு ரூபாய வாங்கிட்டு முன்வரிசையில நிக்கிறீங்களா, போங்கடா பின்னாடி'' என சவுண்ட் விட, டென்ஷனான மாணவர்களோ, ""ஏய்... யாரப்பார்த்து என்னடா சொன்னீங்க'' என ஆவேசமாகி யூனிட் வேன்மீது, செட் பிராப்பர்ட்டிகள்மீது சரமாரியாக கல்வீசி ஏக ரணகளம் பண்ணிவிட்டனராம்.

ஸ்பாட்டில் விஜய் இல்லாததால் நிலவரம் கலவரமாகிவிட்டதாம். பதறியடித்தபடி ஓடிவந்த தயாரிப்பு நிர்வாகிகள், கல்லூரி மாணவர்களை சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு அக்கப்போர் நடந்தும் இருட்டில் பம்மிவிட்டார்களாம் டைரக்டரும் ஸ்டண்ட் மாஸ்டரும்.

-பரமு

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe