Advertisment

தூது போன விஜய்! வெளுத்துக் கட்டிய நயன்தாரா!

/idhalgal/cinikkuttu/vijay-messenger-nayanthara-who-breathed

னது வருங்காலக் கணவர் விக்னேஷ் சிவனுடன் அடிக்கடி அமெரிக்காவுக்கு காதல் ட்ரிப் அடிக்கிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு அமெரிக்காபோன ஜோடி, இப்போது இளைஞர்களின் இசை விழாவைப் பார்க்க கலிபோர்னியாவில் ஜாலியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். தமி

னது வருங்காலக் கணவர் விக்னேஷ் சிவனுடன் அடிக்கடி அமெரிக்காவுக்கு காதல் ட்ரிப் அடிக்கிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு அமெரிக்காபோன ஜோடி, இப்போது இளைஞர்களின் இசை விழாவைப் பார்க்க கலிபோர்னியாவில் ஜாலியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். தமிழில் அஜீத்துடன் "விசுவாசம்' மட்டுமே கைவசம் வைத்துள்ள நயன், மலையாளத்தில் அஞ்சாறு படங்களில் கமிட்டாகி அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம். கல்யாணம் ஆகிருச்சுன்னா அக்கா வேஷத்துக்கும் மதினி வேஷத்துக்கும்தான் தமிழ்ல கூப்பிடுவாய்ங்க. ஆனா மலையாளத்துல 70 வயசானாலும் ஹீரோயினா நடிக்கலாம் என்ற பிரீ பிளான்தானாம்.

Advertisment

nayanthara

சமீபத்துல பிரபுதேவா, விஜய் யைப் பார்த்து ஒரு கதை சொல்ல, விஜய்க்கும் பிடித்துவிட்டதாம்.

Advertisment

விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவை கமிட் பண்ணும் ஐடியாவோடு, டைரக்டர் ஏ.எல். விஜய்யை தூது அனுப்பியிருக்கிறார். பிரபுதேவா பேரைச் சொன்னதுமே காச்மூச்சென கத்த ஆரம்பித்துவிட்டாராம் நயன்.

""அந்தாளுமேல எவ்வளவு நம்பிக்கை வச்சு, எத்தனை கோடிகளை இழந்தேன்! எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டாரே! அவரெல்லாம் மனுஷனா?

nayanthara

எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் அந்தாளு டைரக்ஷன்ல நடிக்க மாட்டேன். இனிமே அந்தாளு பேரைச் சொல்லிக்கிட்டு என்கிட்ட வராதீங்க'' என ஒருமையில் பேசி பிரபுதேவாவை வறுத்தெடுத்துவிட்டாராம்.

"ஆத்தாடி உங்க ஆட்டைக்கு நான் வரல' என அலறியடித்தபடி ஓடிவிட்டாராம் டைரக்டர் ஏ.எல். விஜய்.

Nayanthara vigneshshivan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe