சென்னை, தாம்பரத்தையடுத்துள்ள சாய்ராம் இன்ஜினீயரிங் கல்லூரியில் "பிகில்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடந்தது. அதில் பேசிய விஜய், ""எவனை எங்க வைக்கணுமோ அங்க வைக்கணும். ஃப்ளக்ஸ் பேனரை வச்சவனை விட்ருவாங்க, அதை அச்சடிச்சுக் கொடுத்தவனை புடிச்சு ஜெயில்ல போடுறாங்க'' என்று எடப்பாடியையும் அவரது ஆட்சி யையும் பொளந்து கட்டினார் விஜய்.

Advertisment

vvv

அப்பவே படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திற்கு கண்ணைக் கட்டிருச்சு. விழா முடிந்த மறுநாளே "சினிமா விழாவை எப்படி கல்லூரியில் நடத்தலாம்?' என்று சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசின் உயர்கல்வித்துறை. இதையெல்லாம் பார்த்த கல்பாத்தி அகோரம், தீபாவளி ரிலீஸ் நேரத்தில் எப்படியும் "பிகிலு'க்கு திகிலைக் கிளப்புவார்கள் என்று கதிகலங்கிப் போனார். இதையெல்லாம் அக். 8-ஆம் தேதியிட்ட "சினிக்கூத்து' இதழில் "மிரட்டும் கவர்மென்ட், விஜய் அப்செட்' என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.

Advertisment

vvv

இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் என்றால், படத்தின் பட்ஜெட்டும் எக்குத்தப்பாக ஏறி கல்பாத்தியை கண்ணு முழி பிதுங்க வைத்துவிட்டதாம். விஜய்க்கு சம்பளம் 40 கோடி, அட்லீக்கு சம்பளம் 23 கோடி, நயன்தாராவுக்கு சம்பளம் 9 கோடி, படத்தின் மொத்த ஷூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் பட்ஜெட்டெல்லாம் சேர்த்து 100 கோடிக்குள் கணக்குப் போட்டிருந்தார் கல்பாத்தி அகோரம்.

ஆனால், அட்லீயின் கைங்கர்யத்தால் 145 கோடி யைத் தாண்டிவிட்டதாம். ஏற்கெனவே 100 கோடிக்கு பிஸ்னஸ் பேசியிருந்த கல்பாத்தி, மேலும் கதிகலங்கிப் போனார். அதனால் விஜய்யின் சம்பளத்தில் 23 கோடியும், அட்லீயின் சம்பளத்தில் 11 கோடியும் பாக்கி வைத்துவிட்டு, "மொத்த பிஸ்னஸும் ஆன பிறகு பார்த்துக்கலாம்' என்று கூலாகச் சொல்லிவிட்டாராம் கல்பாத்தி.

Advertisment

இதே விஜய்யின் "மெர்சல்' பட்ஜெட் டையும் எக்குத்தப்பாக ஏற்றிவிட்டு, தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமியை ரணகளமாக்கியவர் அட்லீ. அதன்பின் படமே எடுக்க முடியாத நிலைமைக்கு ஆளாகிவிட்டார் ராமசாமி. ""வட்டிக்கு வாங்காம சொந்தப் பணத்தை வைத்து படம் எடுக்கும் கல்பாத்தி அகோரத்தின் நிலையும் பரிதாபத்திற்குரியதாகிவிடுமோ என கவலையாக இருக்கிறது'' என்று முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் நம்மிடம் சொன்னதை, "விஜய்யை வெறுப்பேற்றிய அட்லீ' என்ற தலைப்பில் ஆக. 27 தேதியிட்ட "சினிக்கூத்து' இதழில் எழுதியிருந்தோம்.

vvv

இப்போது லேட்டஸ்ட் சங்கதி என்னன்னா... தீபாவளிக்கு "பிகில்' ரிலீஸ் ஆகக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு, களத்தில் குதித்துவிட்டது எடப்பாடி அரசு. இதைக் கேள்விப்பட்டு, எடப்பாடியைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறார். "நோ' சொல்லிவிட்டாராம் எடப்பாடி.

இதெல்லாம் தெரிந்துதானோ என்னவோ, விஜய் சேதுபதியின் "சங்கத்தமிழன்' படமும், கார்த்தியின் "கைதி' படமும், அக்டோபர் ரிலீஸ் என மட்டும் செப்டம்பர் கடைசிவரை, விளம்பரம் செய்து வந்தவர்கள், அக். 7-ஆம் தேதியிலிருந்து, தீபாவளி ரிலீஸ் என குதூகலமாக அறிவித்துவிட்டார்கள்.

vvv

ஒரு படம் முடிந்து ரிலீஸ் ஆகும்வரை அடுத்த படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்துகொள்ளமாட்டார், அதைப் பற்றிய புரமோவும் பண்ணமாட்டார் விஜய். ஆனால், "பிகிலு'க்கு எடப்பாடி கிளப்பிய திகிலாலும், சம்பளப் பாக்கி கடுப்பாலும், "கைதி' டைரக்டர் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் நடித்துவரும் படத்தைப் பற்றிய செய்திகளை மீடியாவில் ரிலீஸ் பண்ணிவருகிறார் விஜய்.

அக்டோபர் 7-ஆம் தேதி ஆயுத பூஜை யன்று, சென்னை நசரத் பேட்டையில் இருக்கும் இ.வி.பி. ஸ்டூடியோவில் சண்டைக்காட்சியுடன் ஆரம்பமாகியுள்ளது விஜய்- லோகேஷ் கனகராஜ் படம்.

கரெக்டான நேரத்துல கரெக்டாத்தான் ஆரம்பிச்சிருக்காக!

-ஈ.பா. பரமேஷ்வரன்