Advertisment

விஜய் ஆண்டனி வீம்பு!

/idhalgal/cinikkuttu/vijay-antony-boasted

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பேரன் என்ற கெத்துடன் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக "சுக்ரன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. வரிசையாகப் படங்கள் கிடைத்து, பிஸியான மியூஸிக் டைரக்டராக வளர்ந்து வந்துகொண்டிருந்த போதுதான், சன் டி.வி.யில் தொகுப்பாளினியாக இருந்த ஃபாத்திமா ஹனிடியூவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார். ஹனிடியூவைக் கரம் பிடித்தபிறகு இசையில் மேலும் பிஸியானார் விஜய் ஆண்டனி.

Advertisment

vijayantony

"சுக்ரன்' மூலம் சுக்கிர திசை அடித்த விஜய் ஆண்டனியை யார் தூண்டிவிட்டார்களோ, இல்ல அவரே த

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பேரன் என்ற கெத்துடன் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக "சுக்ரன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. வரிசையாகப் படங்கள் கிடைத்து, பிஸியான மியூஸிக் டைரக்டராக வளர்ந்து வந்துகொண்டிருந்த போதுதான், சன் டி.வி.யில் தொகுப்பாளினியாக இருந்த ஃபாத்திமா ஹனிடியூவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார். ஹனிடியூவைக் கரம் பிடித்தபிறகு இசையில் மேலும் பிஸியானார் விஜய் ஆண்டனி.

Advertisment

vijayantony

"சுக்ரன்' மூலம் சுக்கிர திசை அடித்த விஜய் ஆண்டனியை யார் தூண்டிவிட்டார்களோ, இல்ல அவரே தூண்டிக்கொண்டாரோ ஹீரோவாக நடிக்கும் ஆசையோடு களத்தில் குதித்தார். அவர் ஹீரோவான முதல் படம் "நான்' செம ஹிட் அடித்தது. அடுத்துவந்த "சலீம்' நல்ல ரிசல்ட் கொடுத்தது. ரைட்டு, இனிமே நமக்கு நிரந்தரமா சுக்கிர திசைதான்னு நினைச்சு மியூஸிக்கை விட்டுவிட்டு ஹீரோ வேஷம் போடுவதில் கவனம் செலுத்தினார்.

Advertisment

ஆனா சுக்கிர திசைக் காத்து வேற பக்கமா அடிக்க ஆரம்பிச்சு விஜய் ஆண்டனிக்கு கிரக திசை ஆரம்பமாயிருச்சு. "எமன்', "சைத்தான்'-ன்னு ஏறுக்குமாறா பேரு வச்ச படங்களும் சரி, "அண்ணாதுரை', "இந்தியா- பாகிஸ் தான்'-ன்னு நல்ல பேரு வச்ச படங்களும் சரி, வரிசையா ஊத்திக்கிச்சு. இடையில் சசி டைரக்ஷனில் வந்த "பிச்சைக்காரன்' மட்டும் விஜய் ஆண்டனியை கோடீஸ்வரனாக்கியது. ஆனா முந்தைய படங் களின் ஊத்தலால், தயாரிப்பாளர் என்ற முறையில் கடனாளியானார் விஜய் ஆண்டனி.

vijayantony

ஆனாலும் அவரைப் பிடிச்ச ஹீரோ ஆசை விடவேயில்லை. மீண்டும் தனது சொந்த பேனரில் உதயநிதி ஸ்டாலிலின் மனைவி கிருத்திகாவின் டைரக்ஷனில் "காளி'-யை ஆரம்பித்தார் விஜய் ஆண்டனி. படமும் போன மாசம் ரிலீசாச்சு. கிருத்திகாவின் கதை சுத்துன சுத்துல, படம் பார்த்தவனுக்கு தலை சுத்துனதுதான் மிச்சம். இந்த லட்சணத்துல, "இங்க யாருக்கும் ரசிக்கத் தெரியல'-ன்னு கிருத்திகா உதயநிதி வேற அலட்டல் பேட்டி கொடுத்து அக்கப் போர் பண்ணினார். ஆனாலும் அசராத விஜய் ஆண்டனியோ, "திமிரு பிடிச்சவன்' படத்தை முக்கால்வாசி முடித்துவிட்டு, அர்ஜுனுடன் "கொலைகாரன்' படத்தில் இணைந்துள்ளார்.

விஜய் ஆண்டனி ஏன் இப்படி வீராப்பா இருக்காரு என அவரது நட்பு வட்டத்தில் உள்ள சிலரிடம் கேட்டோம். ""முதல் படமான "நான்' ரெண்டு கோடி செலவுல எடுத்து நல்ல லாபம் பார்த்தாரு. ஏன்னா டைரக்டர், ஹீரோயின் மற்ற டெக்னீஷியன்கள் யாருக்கும் பெருசா சம்பளம் கிடையாது. அதே ஃபார்முலா எல்லாப் படத்துக்கும் ஒர்க்-அவுட் ஆகுமா? இப்ப சினிமா இருக்குற ரேஞ்சுக்கு சீப்பான சம்பளத்துக்கு வேலை செய்ய யார் வருவா? ரெண்டாவது, கதை கேட்பதற்கு ஆரம்பத்தில் அவரிடம் இருந்த நல்ல டீம் இப்ப இல்லை. அவரே எல்லா முடிவு களையும் எடுத்து தானும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்பும் நிலைக்கு வந்துட்டாரு. அதனால இப்ப ஏழு கோடி கடனாளியாகிட்டாரு'' என்கிறார்கள்.

ஹலோ விஜய் ஆண்டனி, மீண்டும் வின்னிங் ஸ்பாட்டுக்கு வாங்க பிரதர்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe