Advertisment

ரஜினிக்கு எதிராக விஜய்? -பின்னனி ரகசியம்!

/idhalgal/cinikkuttu/vijay-against-rajini-secret-secret

சில மாதங்களுக்குமுன்பு, ஏ.சி. சண்முகத்தின் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்துவைத்தார் ரஜினி.

Advertisment

rajini

அப்போது பேசிய அனைவருமே ரஜினி முதல்வராகியே தீரவேண்டும் என்றனர். திரை பிரபலங்கள், vijayஎம்.ஜி.ஆரின் விசுவாசிகள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் ரஜினி.

Advertisment

அப்போது ரஜினியிடம் நினைவுப் பரிசை பெற்றுக

சில மாதங்களுக்குமுன்பு, ஏ.சி. சண்முகத்தின் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்துவைத்தார் ரஜினி.

Advertisment

rajini

அப்போது பேசிய அனைவருமே ரஜினி முதல்வராகியே தீரவேண்டும் என்றனர். திரை பிரபலங்கள், vijayஎம்.ஜி.ஆரின் விசுவாசிகள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் ரஜினி.

Advertisment

அப்போது ரஜினியிடம் நினைவுப் பரிசை பெற்றுக்கொண்ட பின் திடீரென ரஜினியின் காலில் விழுந்து விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி. வணங்கியதைப் பார்த்து ரஜினி உட்பட அனைவரும் அதிர்ச்சியாகிவிட்டனர். எஸ்.ஏ.சி. பேசும்போதுகூட, ""அண்ணன் ரஜினி அவர்கள், தமிழகத்தின் முதல்வராவது காலத்தின் கட்டாயம்'' என்றவர், வார்த்தைக்கு வார்த்தை ""அண்ணன் ரஜினி, அண்ணன் ரஜினி'' என உருகி உருகிப் பேசினார்.

ஆனால் கடந்த வாரம் தான் ஹீரோவாக நடிக்கும் "டிராஃபிக் ராமசாமி' படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சி., ""இது வாழ்க்கை முழுக்க போராடி வருபவரின் கதையை அடிப்படையாகக்கொண்ட படம். போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்கவேண்டும் என்றால் கூட, குழந்தை அழுதால்தான் பால் கிடைக்கும். போராட வேண்டாம் என்றால் எப்படி? போராட்டம்தானே நமது கலாச்சாரத்தை மீட்டுக் கொடுத்தது. தூத்துக்குடி போராட்டம்தானே ஒரு ஆலையை மூட வைத்தது. போராட வேண்டாம் எனச் சொல்வது பைத்தியக்காரத்தனம்'' என ரஜினியை நேரடியாகவே காட்டமாகத் தாக்கினார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

sac

இந்த காட்டப் பேச்சின் பின்னணி ரகசியத்தைத் தோண்டத் தொடங்கியபோது கிடைத்த தகவல்கள் இதுதான். ""ரஜினி, கமலுக்கு முன்னாலேயே தனது மகன் விஜய்யை அரசியலுக்குள் இறக்க ஆயத்தப் பணிகளை ஆரம்பித்தார் எஸ்.ஏ.சி. ஆனால் விஜய்யோ "நன்றாக யோசித்து இறங்குவோம்' என தாமதப்படுத்தினார். இப்போது ரஜினி அரசியலுக்குள் என்ட்ரியானதும் அவரது கட்சியில் சேரும் முடிவோடுதான் ரஜினி புகழ் பாடி, காலில்விழுந்தார்.

sac-rajini

ஆனால் ரஜினி தரப்பிலிலிருந்து ரெட் சிக்னல் விழுந்ததால், அப்செட்டாகி, ரஜினியை சரமாரியாக தாக்கிப் பேசியிருக்கிறார். இதன் பின்னணியில் விஜய்யும் இருக்கலாம்'' என்கிறார்கள் கோடம்பாக்கத்துத் தயாரிப்பு புள்ளிகள்.

-பரமு

Kala rajini
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe