ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும் இருந்தவர் என்.டி. ராமராவ்.
தற்போது பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.
"என்.டி.ஆர் பயோபிக்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கின்றார். இந்தப் படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கிறார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடிக்கிறார் என்பதால் ஏற்கெனவே இருந்த இப்படத்தின்மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது.
கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க, உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.