ந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த "3 சியர்ஸ்' என்னும் வீடியோ ஆல்பம் உருவாகியிருக்கிறது. அஷ்வ மித்ரா இசையமைத்துள்ளார்.

Advertisment

vv

அவரது மகன் ஸ்ரீமன் ரோஷன் பாடலைப் பாடியுள்ளார். ஸ்ரீமன், "காஞ்சனா- 2' படத்தில் "மொட மொடவென' என்ற பாடலைப் பாடி பரவலான புகழ்பெற்றவர். பாடலை எழுதியிருப்பவர் ஜெயந்தி. ஒளிப்பதிவு ஜே.கே. கார்த்திக். க்ளாஸி டோன்ஸ் ஆடியோ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த வீடியோ ஆல்பம்.

இந்தியா உலகக் கோப்பையை ஏற்கெனவே இரண்டுமுறை வென்றது. இந்த ஆல்பம் இந்திய அணி மீண்டும் "உலகக் கோப்பை 3'-ஐ வெல்வதற்கு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆல்பத்தை இயக்குநர் வெங்கட் பிரபு, ட்விட்டரில் வெளியிட்டார்.