Advertisment

மிக மிக அவசரம்! -விமர்சனம்

/idhalgal/cinikkuttu/very-very-urgent-vimarcanam

மிழகத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுவதுமே காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள், உயர்போலீஸ் அதிகாரிகளால் படும் அவஸ்தை களும், சந்திக்கும் துயரங்களும் சொல்லி மாளாது. ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் பெண் களுக்கு அதே ஐ.பி.எஸ். ஆண் களால் செக்ஸ் டார்ச்சருக்குள் ளாவதும் சகஜமாகிவிட்டது. கணவன்- மனைவி குடும்பத் தகறாரால், புகார் கொடுக்கவரும் கணவனையே களவாடி கள்ளக்காதல் வளர்க்கும் பெண் காவலர்களும் உண்டு.

Advertisme

மிழகத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுவதுமே காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள், உயர்போலீஸ் அதிகாரிகளால் படும் அவஸ்தை களும், சந்திக்கும் துயரங்களும் சொல்லி மாளாது. ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் பெண் களுக்கு அதே ஐ.பி.எஸ். ஆண் களால் செக்ஸ் டார்ச்சருக்குள் ளாவதும் சகஜமாகிவிட்டது. கணவன்- மனைவி குடும்பத் தகறாரால், புகார் கொடுக்கவரும் கணவனையே களவாடி கள்ளக்காதல் வளர்க்கும் பெண் காவலர்களும் உண்டு.

Advertisment

உயர்பதவியில் இருக் கும் பெண் போலீஸ் அதிகாரி களைவிட கான்ஸ்டபிள் ரேஞ்சில் இருக்கும் பெண் போலீசுக்குத்தான் vvvசித்ரவதை களும் செக்ஸ் டார்ச்சர்களும் அதிகம். அப்படிப்பட்ட பெண் போலீசின் அவஸ்தைகளைச் அப்பட்டமாகச் சொல்வதுதான் "மிகமிக அவசரம்.'

வி ஹவுஸ் புரொடக்ஷன் பேனரில் படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி. ஈரோடு மாவட்டம், பவானி ஆற்றக் கரையில் இருக்கும் சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்யவருகிறார் இலங்கை யைச் சேர்ந்த முக்கிய வி.ஐ.பி. ஆண்- பெண் கான்ஸ்டபிள்களை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, பந்தோபஸ்து பணிக்காக ஆங்காங்கே ஊருக்குள் இறக்கிவிடுகிறார் இன்ஸ்பெக்டராக வரும் "வழக்கு எண்' முத்துராமன். கடைசியாக கான்ஸ்டபிள் சாமந்தி (ஹீரோயின் ஸ்ரீபிரியங்கா)யை ஊருக்கு வெளியே இருக்கும் பெரிய பாலம் ஒன்றில் இறக்கிவிட்டுச் செல்கிறார்.

காலை ஏழு மணிக்கு பாலத்தில் நிற்கும் சாமந்திக்கு இளநீர், குடிக்க ஜில்லுன்னு தண்ணீர் என அனுப்பிக்கொண்டே இருக்கிறார் முத்துராமன். மதியம் 1 மணி கடந்தும் அந்த வெளிநாட்டு வி.ஐ.பி. வராததால், பாத்ரூம் போக முடியாமல் ரொம்பவே அவஸ்தைப்படுகிறார் பிரியங்கா. ஃபோனில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த, இன்ஸ்பெக்டராக இருக்கும் தனது மச்சானை சஸ்பெண்ட் செய்ய வைத்த பிரியங்காவை பழிவாங்கத்தான் பாலத்தில் டூட்டி, தண்ணீர், இளநீர் சப்ளை செய்கிறார் முத்துராமன்.

Advertisment

படம் முழுக்க பிரியங்காவுக்கு ஒரே ஒரு காக்கி யூனிஃபார்ம்தான் என்றாலும், குழந்தை யிடமும் காதலனிடமும் செல்ஃபோனில் பேசுவது, குடிகார மாமாவிடம் நேரில் பேசுவது என நிறைவாக நடித்திருக்கிறார் ஸ்ரீபிரியங்கா. "தமிழச்சியான தனக்கு தமிழ் சினிமாவில் சரியான இடம் கிடைக்கவில்லை' என புலம்பும் ஸ்ரீபிரியங்காவிற்கு சரியான படம் இது!

இரண்டு மணி நேரப்படமும் ஒரே லொக்கே ஷன் என்பதால், கொஞ்சம் அயற்சியாக இருக் கிறது என்றாலும், சுரேஷ் காமாட்சியின் முயற்சி யைப் பாராட்டலாம்.

cini221019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe