Advertisment

மிகமிக மகிழ்ச்சி

/idhalgal/cinikkuttu/very-happy

ல்ல திரைப்படங்களை வெளியிடவேண்டும்; தயாரிக்க வும் வேண்டும் என்ற எண்ணத் தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர்.எஸ். எஸ்.எஸ். பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ். தணிகைவேல்.

Advertisment

இவர், "நேற்று இன்று', "இரவும் பகலும் வரும்', "போக்கிரி மன்னன்' ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார்.

tree

தற்போது "ஒற்றைப் பனை மரம்' என்ற புதிய படத்தை தயாரித்து வெளியி

ல்ல திரைப்படங்களை வெளியிடவேண்டும்; தயாரிக்க வும் வேண்டும் என்ற எண்ணத் தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர்.எஸ். எஸ்.எஸ். பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ். தணிகைவேல்.

Advertisment

இவர், "நேற்று இன்று', "இரவும் பகலும் வரும்', "போக்கிரி மன்னன்' ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார்.

tree

தற்போது "ஒற்றைப் பனை மரம்' என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.

Advertisment

"போர் முடிவுறும் இறுதி நாட் களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் முகம் கொடுக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள்.

யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத் துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் உங்களை thanigaivelஅழைத்துச் சென்று, ஈழத்தில் கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்துவிடும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்தது குறித்து எஸ். தணிகைவேல் கூறும் போது, "ஒற்றைப் பனை மரம்' திரைப்படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இப்படம் கண்டிப்பாக கொடுக்கும்'' என்றார்.

37 சர்வதேச திரைப்பட விழாக் களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் இப்படம் குவித்திருக்கிறது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைகிறது.

சிறந்த இயக்குநர் விருதுபெற்ற "மண்' பட இயக்குநர் புதியவன் ராசையா இயக்கத்தையும், தேசிய விருதுபெற்ற சுரேஷ் அர்ஸ் படத் தொகுப்பையும், சர்வதேச விருதுபெற்ற இலங்கை ஒளிப்பதி வாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற் கொண்டுள்ளனர்.

முக்கிய பாத்திரங்களாக புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

cine050219
இதையும் படியுங்கள்
Subscribe