2012-ல் "போடா போடி'-யில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். அதன்பின் நிதானமாகவும் கவனமுடனும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். பாலாவின் "தாரை தப்பட்டை'-யில் கரகாட்டக்காரி சூறாவளியாக சுழன்றடித்தார் வரு.

Advertisment

varalakshmi

2016 வரை பதினான்கு படங்களில்தான் நடித்தார்.

ஆனால் 2017-லிலிருந்து இப்பவரை மட்டும் "விக்ரம் வேதா', "நிபுணன்', "விஸ்மயா' (கன்னடம்), "காட்டு', "மாஸ்டர்', "பீஸ்' (மலையாளம்), "சத்யா', "சண்டக்கோழி-2', "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', "மிஸ்டர் சந்திரமௌலி', "கன்னிராசி', "நீயா-2', "அம்மாயி', பெயரிடப்படாமல் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் விஜய் படத்தின் வில்லி, பேச்சுவார்த்தையில் நான்கு படங்கள் என செம பிஸியாக இருக்கிறார் வரலட்சுமி. அஜீத்தின் "விசுவாசம்' படத்தில் வரலட்சுமியை கமிட் பண்ண பேச்சுவார்த்தை நடக்கிறது.

varalakshmi

Advertisment

varalakshmi

விஜய்க்கு வில்லியாக நடித்தாலும் "கன்னிராசி'-யில் விமலுக்கு ஜோடிபோடுகிறார். "சண்டக்கோழி-2'-ல் விஷ்வந்த் என்ற சின்ன நடிகருக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.

பெரிய ஹீரோவான சரத்குமாரின் மகளான வரலட்சுமியால் எப்படி இப்படியெல்லாம் நடிக்க முடியுது? என்ன டெக்னிக்கை யூஸ் பண்ணுகிறார் என சினிமா பி.ஆர்.ஓ. ஒருவரிடம் கேட்டோம். ""பரந்த மனசும், கர்வமில்லாத குணமும்தாங்க வரலட்சுமியின் டெக்னிக். தன்னோட கேரக்டருக்கு வெயிட் இருந்தா போதும், ஹீரோ வெயிட்டான ஆளா இருக்கணும்னு அவசியம் இல்லை என்பதும் வருவின் பாலிஸி. அதே நேரத்துல சம்பளம் அதிகமா கிடைக்கும்கிறதுக்காக சப்பைத்தனமான கதைகளை ஓ.கே. பண்ணமாட்டாரு. வெட்டி பந்தா, வீணான அலட்டல் பண்ணாம, தயாரிப்பாளர்களுக்கு தண்டச் செலவு வைக்காத நல்ல மனசுக்கு சொந்தக்காரர்தான் வரலட்சுமி.

Advertisment

varalakshmi

எந்த ஒரு முடிவு எடுப்பதா இருந்தாலும் சுயமா சிந்திச்சுத்தான் முடிவெடுப்பார். பெரிய நடிகர், அரசியல்வாதியோட பொண்ணுங்கிற கர்வமெல்லாம் கிடையாது. தனது நட்பு வட்டாரத்திற்கு தாராளமாக உதவி செய்யும் குணத்துக்குச் சொந்தக்காரர். "ஷக்தி' என்ற அமைப்பின் மூலம் பெண்களின் பாதுகாப்புக்காக போராடிக்கொண்டிருக்கிறார். வரலட்சுமியின் நல்ல குணங்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்'' என ரொம்பவே மெய்சிலிர்த்துப் பேசினார் அந்த பி.ஆர்.ஓ.

நல்ல மனசுக்காரர்களுக்கு எங்கும் எப்போதும் நல்ல இடம் உண்டு.

-ஈ.பா. பரமேஷ்