Advertisment

வரலட்சுமி கிளப்பிய கிலி -டைரக்டர் டச்சிங் ஸ்பீச்!

/idhalgal/cinikkuttu/vallalakshmi-fledgling-director-touching-speech

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ. ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "காட்டேரி.' காமெடி வித் ஹாரர் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். "யாமிருக்க பயமே' என்ற வெற்றிப்படத்தை

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ. ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "காட்டேரி.' காமெடி வித் ஹாரர் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். "யாமிருக்க பயமே' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

Advertisment

varalakshmi

இந்தப்படத்தின் பத்திரிகை யாளர் சந்திப்பு சென்னை, சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து varalakshmiகொண்ட நடிகர்கள் அனைவரும் படத்தில் தாங்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் உடையில் வந்து ஆச்சரியப்படுத்தினர்.

ரவிமரியா பேசும்போது, ""இந்தப்படத்தில் மூன்றாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்கள். சொல்லப்போனால் அரை ரம்பாவாகவே என்னை மாற்றிவிட்டார்கள்.

Advertisment

​​varalakshmi

இது ஒருபக்கம் என்றால் நாயகன் வைபவும், கருணாகரனும் என்னை படப்பிடிப்பு நாட்கள் முழுவதும் கதாநாயகி பக்கமே நெருங்க விடாமல் சதிசெய்து பார்த்துக்கொண்டார்கள். இப்படி சின்னச்சின்ன விஷயங்கள் சோகமாக அமைந்தாலும் எனக்கு இந்த கேரக்டரில் நடிப்பது புது அனுபவமாக இருந்தது.

அதேபோல வரலட்சுமியுடன் நடித்ததும் புது அனுபவமாக இருந்தது.. ஒரு காட்சியில் அவர் என்னை உதைக்க வேண்டும். என்னிடம் பாதுகாப்பு கவசம் அணிந்திருக்கீங்களா என கேட்டார் வரலட்சுமி. ""நான் எதற்கு என கேட்க அவரோ ரொம்ப கூலாக, 'நான் பாலா சார் ஸ்டூடண்ட்.. உதைக்கிறது எல்லாமே ரியலாவே பண்ணித்தான் பழக்கம்'' என தன் பங்குக்கு டெரர் ஏற்றினார். இன்னொரு நாயகி சோனம் பஜ்வாதான் என்னுடன் கடைசிவரை ஒட்டவே இல்லை.. எப்படியோ இந்தப்படத்தில் என்னை கனவுக்கண்ணன் ஆக ஆக்கிட்டாங்க'' என கலகலப்பாக தனது அனுபவங் களை பகிர்ந்து கொண்டார்.

cine180918
இதையும் படியுங்கள்
Subscribe