ணிரத்னம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சர்ஜுன் கே.எம். இயக்கத்தில் அண்மையில் வெளியாகி பரவலான பாராட்டுப் பெற்ற படம் "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'. இதில் தாமஸ் பாத்திரத்தில் வரும் விவேக் ராஜ்கோபாலும், மூத்த நடிகர் கிஷோரும் கதையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருப் பார்கள்.

Advertisment

விவேக் ஓர் அறிமுக நடிகராக இருந்தாலும், அனுபவ நடிகரான கிஷோரு டன் ஈடு கொடுத்து நடித்திருப்பார். யாரிந்த விவேக் ராஜ்கோபால்?

Advertisment

varalakshmi

""நான் சென்னைதான். ரஜினி சாரின் ஆஸ்ரம் ஸ்கூலில் படித்தேன். கல்லூரிப் படிப்பு லயோலாவில் போனது. "கூத்துப்பட்டறை'யில் நடிப்புப் பயிற்சி பெற்றேன். எனக் குப் பயிற்சி அளித்தவர் "ஜோக்கர்' பட நாயகன் சோமசுந்தரம்.

நல்லதொரு சினிமா வாய்ப்புக்காகச் சில ஆண்டுகள் காத்திருந் தேன். "எச்சரிக்கை' படம் உருவாக இருப்பதை அறிந்து இயக்குநர் சர்ஜுனை விடாமல் துரத்தினேன்.

Advertisment

ஒரு கட்டத்தில் அவர் என்னைத் தேர்வு செய்தார். எனக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி, தன்னம்பிக்கை எல்லாம் வந்தது .ஏனென்றால் உடன் நடிப்பவர்கள் சத்யராஜ், சிஷோர், வரலட்சுமி என்று ஏற்கெனவே பிரபலமானவர்கள் இருக்கும்போது இயக்குநர் நான் ஏற்ற தாமஸ் பாத்திரத்துக்கு பிரபலமான ஒரு நடிகரைக்கூட நடிக்க வைத்திருக்க முடியும். இருந்தாலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த டைரக்டர், புரொடியூசர் சுந்தர் அண்ணாமலை சார் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி'' என்றவரிடம் படப்பிடிப்பு அனுபவம் பற்றிக் கேட்டால் பரவசமாகிறார்.

""வரலட்சுமி, சினிமா பின்னணியிலிருந்து வந்தாலும் என்னைப் போன்ற புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய விஷயம்.

புது நடிகர் என்று பார்க்காமல் என்னுடன் காதல் சண்டை காட்சிகளில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பாடல் காட்சியிலும் அதேபோல ஒத்துழைத்து நடித்தார். படம் முடிந்தபின்னும் நட்பு தொடரும் அளவுக்கு திறமையான, கண்ணியமான நடிகை . இப்படி ஒரே படத்தின்மூலம் மறக்க முடியாத அனுபவங்கள்'' என்கிறார்.