பிலிம் பூஜா பட நிறுவனம் சார்பில், ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் "வகிபா.' இது வண்ணக்கிளி பாரதி எனும் பெயரின் சுருக்கமாகும்.
இந்தப் படத்தில் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vagiba.jpg)
நாயகியாக மனிஷா ஜித் நடிக்கிறார். "நான் மகான் அல்ல' மகேந்திரன், கஞ்சா கருப்பு, ஏ. வெங்கடேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு- எஸ். சக்திவேல், இசை- முஜிப் ரஹ்மான், வசனம்- ரா. கண்ணன், பாடல்கள்- மோகன்ராஜ், குகை மா. புகழேந்தி, எடிட்டிங்- ஏ. சந்திரகுமார், கலை- சாய்மணி, நடனம்- ரமேஷ், சண்டை- நைப் நரேன், தயாரிப்பு மேற்பார்வை- சங்கர், நிர்வாகத் தயாரிப்பு- ராமு, கதை, தயாரிப்பு- ஸ்சொப்பன் பிரதான், திரைக்கதை, இயக்கம்- இகோர். இவர் "கலாபக் காதலன்', "தேன்கூடு', "வந்தா மல' ஆகிய படங்களை இயக்கியவர்.
""ஒரு தனி மனிதன் அவனோட ஜாதிய மறச்சு வாழும்போது ஈசியாக வாழ்ந்துவிடுகிறான்.
ஆனால், அவன் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவன் எனத் தெரியவரும்போது, அது அவனது வாழ்கையைக் குழப்புகிறது அல்லது கஷ்டத்தில் ஆழ்த்து கிறது. இதுதான் இந்தப் படத்தின் கதை'' என்கிறார் இகோர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05/vagiba-t.jpg)