ருகிஉருகி காதலிலித்து ஆசை ஆசையாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள்தான் டைரக்டர் ஏ.எல். விஜய்யும் ஹீரோயின் அமலா பாலும். யார்மீது என்ன தவறோ, என்ன நடந்ததோ, கல்யாணமாகி பத்து மாதங்கள் கழித்து பரஸ்பரம் மனம் ஒத்துப்போய், இருவரும் கோர்ட்மூலம் பிரிந்தனர்.

Advertisment

amalapal

பழைய ஆசையும் பாசமும் போகாத விஜய், மாஜி மனைவி அமலா பாலை நினைத்து உருகுவதை நிறுத்தவேயில்லை. தனிமையில் மகன் தவிப்பதைப் பார்த்து, இன்னொரு கல்யாணம் பண்ணிவைக்கும் முடிவுக்கு வந்து, பெண் பார்க்கத் தொடங்கினார், விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன். நிலைமை இப்படியே போய்க் கொண்டிருந்தபோதுதான், அமலா பாலையும் விஜய்யையும் மீண்டும் சேர்த்துவைக்கும் முயற்சியில் இறங்கினார் பிரபல டான்ஸ் மாஸ்டரும் டைரக்டருமான தாடிக்காரர்.

Advertisment

இந்த விஷயம் விஜய் வீட்டுக்குத் தெரியவர, மகனை கடிந்து கொண்டனர்.

ஆனாலும் அமலா பாலை மறக்கமுடியாமல் தவித்தார் விஜய். "திருட்டுப்பயலே-2' ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனுக்கு செம தூக்கலான கிளாமர் காஸ்டியூமில் அமலாபால் வந்ததை பத்திரிகைகளிலும் டி.வி.க்களிலும் பார்த்து ரொம்பவே கவலைப்பட்ட விஜய், பப்ளிக் பிளேசில் இந்த மாதிரி வருவதைக் குறைச்சுக்கச் சொல்லுங்க, என அமலா பாலிலின் தோழிகளிடம் ரொம்பவே ஆதங்கப்பட்டார்.

vijay-amalapal

வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில் பிஸியானார் அமலா பால். சமீபத்தில் மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு டான்ஸ் ரிகர்சல் பார்த்துக் கொண்டி ருந்தபோது, தொழிலதிபர் ஒருவர் தொல்லை கொடுத்ததால், போலீசில் கம்ப்ளெய்ன்ட் பண்ணும் அளவுக்கு ஆவேசமானார் அமலா பால். சென்னை மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அமலா பால் போவது தெரிந்த விஜய், பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திராவைத் தொடர்புகொண்டு, ""அவ கூடவே இருந்து ஹெல்ப் பண்ணுங்க. ஸ்டேஷனிலிலிருந்து கிளம்புற வரைக்கும் பக்கத்துலயே இருந்து பத்திரமா பார்த்துக்கங்க'' என உருகியிருக்கிறார்.

Advertisment

இதுதான் விட்டகுறை, "தொட்ட' குறைங்கிறது.

-ஈ.பா. பரமேஷ்