Advertisment

விஷாலை விரட்டுவோம் அதிரடி டீமின் ஆக்ஷன் ஆரம்பம்!

/idhalgal/cinikkuttu/vaisaalaai-vairatatauvaoma-atairatai-taiimaina-akasana-aramapama

ரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் அணியை எதிர்த்து மல்லுக்கட்டி, நடிகர் சங்கப் பொறுப்புகளுக்கு வந்தது விஷால் தலைமையிலான அணி. ""சரத்குமார் குழுவினர் எஸ்.பி.ஐ. சினிமாஸுக்கு தாரை வார்த்த நடிகர் சங்க இடத்தை மீட்போம், அழகுமிகு கட்டடம் கட்டுவோம், வெளியூர்களிலிருந்து வருபவர்கள் அதிசயித்துப் பார்க்கும் வகையில் நடிகர் சங்கக் கட்டடத்தை உருவாக்குவோம், நலிலிவடைந்த நடிகர் சங்க மூத்த உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்தி வழங்குவோம்'' என பல்வேறு வாக்

ரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் அணியை எதிர்த்து மல்லுக்கட்டி, நடிகர் சங்கப் பொறுப்புகளுக்கு வந்தது விஷால் தலைமையிலான அணி. ""சரத்குமார் குழுவினர் எஸ்.பி.ஐ. சினிமாஸுக்கு தாரை வார்த்த நடிகர் சங்க இடத்தை மீட்போம், அழகுமிகு கட்டடம் கட்டுவோம், வெளியூர்களிலிருந்து வருபவர்கள் அதிசயித்துப் பார்க்கும் வகையில் நடிகர் சங்கக் கட்டடத்தை உருவாக்குவோம், நலிலிவடைந்த நடிகர் சங்க மூத்த உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்தி வழங்குவோம்'' என பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கினார் விஷால்.

Advertisment

நலிலிவடைந்த கலைஞர் களுக்கு மாதந்தோறும் வழங்கிவந்த 2000 ரூபாயை 3000 ரூபாயாக உயர்த்திய சில காரியங்களைத் தவிர, ஏகப்பட்ட காரியங்களில் ஓட்டையைப் போட்டு, ஆட்டையையும் போட்டது விஷால் குரூப்.

Advertisment

vishal

நடிகர் சங்கப் பொறுப்புக்கு விஷால் குரூப் வந்து முப்பது மாதங்களுக்கும் மேலாகி, மூன்றாண்டு பதவிக்காலம் முடியப் போகும் நேரத்தில் வழக்கம்போல் சரவேட்டு, அதிர்வேட்டைப் பற்ற வைத்துள்ளார் அப்போது விஷாலுக்கு ஹீரோவாக இருந்து பண வகையிலும் களவேலைகளிலும் உதவிய ஜே.கே. ரித்தீஷ். இப்போது விஷாலுக்கு எதிராக வாள் சுழற்ற ஆரம்பித்திருக்கிறார்.

நட்சத்திர கிரிக்கெட்டில் நடந்த ஆறு கோடி ரூபாய் ஊழலை அம்பலப்படுத்திய நடிகர்- தயாரிப்பாளர்- டைரக்டர் வாராகியும் விஷாலுக்கு எதிராக களத்தில் குதித்து அனலைக் கிளப்பிவருகிறார்.

meet

வாராகி தயாரித்து, டைரக்ட் பண்ணி, ஹீரோவாகவும் நடித்த "சிவா மனசில புஷ்பா' படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப்பில் கடந்த 7-ஆம் தேதி நடந்தது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர்கள் எஸ்.வீ. சேகர், ஜே.கே. ரித்தீஷ், தயாரிப்பாளர் கே. ராஜன், டைரக்டர்கள் தருண்கோபி, சுரேஷ் காமாட்சி, அப்போதைய ஹீரோயின் அம்பிகா, சி.ம.பு. ஹீரோயின் ஷிவானி ஆகியோர் ஆஜராகியிருந்தனர். நலிலிவடைந்த 100 கலைஞர்களுக்கு வாராகி வேண்டுகோளின்படி, தலா 10 ஆயிரம் ரூபாயை ரித்தீஷ் வழங்கினார் jkவிழாவில் பேசிய ஜே.கே. ரித்தீஷ், ""எதுவுமே செய்யாமல் வீண் ஜம்பம் அடித்துக்கொண்டிருக்கும் விஷாலை நடிகர் சங்கத்தைவிட்டு விரட்டுவோம்'' என ஆவேசத் தாக்குதலை ஆரம்பித்தார். டைரக்டர் சுரேஷ் காமாட்சியோ, ""தமிழகத்தைவிட்டே விஷாலை விரட்டுவோம்'' என வெடித்தார்.

விழாவில் பேசிய அனைவருமே விஷால் டீமுக்கு எதிரான ஆக்ஷன் டீமாக மாறி அனலைக் கிளப்பினர்.

அதே விழாவில், சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திரக் கலைவிழாவுக்காக மலேசியா டத்தோ அன்வரிடம், விஷாலிலின் ஏஜெண்டாக நடிகர் ரமணா மாறி, 20 கோடி ரூபாய் பேரம் பேசிய வீடியோவை ரிலீஸ் பண்ணி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்தார் வாராகி. ரைட்டு, நடிகர் சங்க விவகாரத்துல அதிரடியும் அக்கப்போரும் ஆரம்பிச்சிருச்சு.

-ஈ.பா. பரமேஷ்வரன்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe