Advertisment

வைரமுத்துவின் "வர்மா' வருத்தம்!

/idhalgal/cinikkuttu/vairamuthus-verma-regret

காதலன் காதலியைக் கைவிடுவதுண்டு; காதலி காதலனைக் கைவிடுவதுண்டு. ஆனால், ஒரு காதல் படமே கைவிடப்பட்ட வருத்தத்திலிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கைவிடப்பட்டதாகக் கருதப் படும் "வர்மா' படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதி யிருக்கிறார். இளமையான க

காதலன் காதலியைக் கைவிடுவதுண்டு; காதலி காதலனைக் கைவிடுவதுண்டு. ஆனால், ஒரு காதல் படமே கைவிடப்பட்ட வருத்தத்திலிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கைவிடப்பட்டதாகக் கருதப் படும் "வர்மா' படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதி யிருக்கிறார். இளமையான காதல் கதை என்பதாலும், காதலர் தினத்தில் வெளியிடப்படவிருக்கிறது என்பதாலும், கூடுதல் ஆர்வத்தோடு எல்லா வரிகளையும் இளமை பொங்க எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து. காதலும் படமும் கைவிடப் பட்டாலும், காதல் பாடல் கைவிடப்படுவதில்லை.

Advertisment

verma

இதோ அந்தக் காதல் பாட்டு:

மழையில்லை மேகமில்லை ஆயினும்

மலர்வனம் நனைகின்றதே

திரியில்லை தீயுமில்லை ஆயினும்

திருவுடல் எரியுண்டதே

ஒருவரின் சுவாசத்திலே

இருவரும் வாழுகின்றோம்

உடல் என்ற பாத்திரத்தில்

உயிர்ப்பொருள் தேடுகின்றோம்

vairamuthu

காற்றில் ஒலிபோலே

கடலில் மழைபோலே

இருவரும் ஒருவரில்

ஒன்றினோம்

பூக்கள் ஒன்றுதிரண்டு

படைகூட்டி வருவதுபோல்

இன்பம் ஒன்றுதிரண்டு

என்மீது பாய்கிறதே

என் ஆவி பாதி குறைந்தால்

என் மேனி என்னாகும்?

ஆகாயம் அசைகிறபோது

விண்மீன்கள் என்னாகும்?

தரையில் கிடந்தேனே

தழுவி எடுத்தாயே

தலைமுதல் அடிவரை நிம்மதி

பண்ணும் தொல்லைகளெல்லாம்

துன்ப வாதை செய்கிறதே

இன்னும் தொல்லைகள் செய்ய

பெண்ணின் உள்ளம் கெஞ்சியதே

திறக்காத ஜன்னல்கள் எல்லாம்

திடுக்கிட்டுத் திறக்கிறதே

எனக்குள்ளும் இத்தனை

அறையா

எனக்கின்று புரிகிறதே

மழையில் தலைசாயும்

இலையின் நிலைபோல

எனதுயிர் உன்வசம் ஆனதே

Advertisment
cine260219
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe