saravana - arul-tamana

ரவணா ஸ்டோர்ஸ் தி லெஜெண்ட் கடையைத் தெரியாதவர்கள் தமிழகத்தில் ரொம்பவே குறைவு. ஆனால் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்த அண்ணாச்சி மகன் சரவணன் அருனைத் தெரியாதவர்கள் உலக அளவில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவியுடன் ஹைடெக்காக சரவணன் நடித்த முதல் விளம்பரப் படம் வெளியானபோதே கவனத்தை ஈர்த்தார்.

Advertisment

இவரின் நிறுவனத்திற்குப் போட்டியான நிறுவனங்கள் அவ்வப்போது சினிமா மார்க்கெட் பீக்கில் இருக்கும் ஹீரோ- ஹீரோயின்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து விளம்பரப் படங்கள் எடுத்துக் கொண்டிருக் கின்றன. பார்த்தார் தி லெஜெண்ட் சரவணன், தானே களத்தில் இறங்கும் அதிரடி முடிவை எடுத்தார்.

Advertisment

தனது நிறுவன விளம்பரத்துக்காக ஹன்ஸிகாவையும் தமன்னாவையும் ஒரே நேரத்தில் புக் பண்ணினார். இருவருக்கும் செம ரிச்சான காஸ்ட்யூம், அதைவிட செம ரிச்சாக, தனக்கு கோட்- சூட், ஷெர்வானி என பிரத்யேக மாக காஸ்ட்யூமை வடிவமைத்தார். "சும்மா எகிறுதுல்ல' ரேஞ்சுக்கு தமன்னாவுடனும் ஹன்ஸிகாவுடன் ரொமாண்டிக் லுக்கில் பின்னி எடுத்தார். நக்கலாக விமர்சித்தவர் கள்கூட இந்த விளம்பரத்தை விரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர்.

hanshika

அதன்பின் சரவணன் நடித்த ஒரு விளம்பரம். டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம், ஹன்ஸிகா, தமன்னா, ஹாலிலிவுட் மாடலிலிங் அழகிகள், ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடனும் ஆசையுடனும் எதிர்பார்த்திருக்க, ரோல்ஸ்ராய்ஸ் காரில் வந்து இறங்கி அதகளப்படுத்தியிருப்பார் சரவணன்.

Advertisment

சமீபத்திய தீபாவளிக்கு, சூப்பர் பியூட்டியான இயற்கைக் காட்சிகளை செட் போட்டு, அதில் ஹன்ஸிகாவை சுற்றிச் சுற்றி வந்து டூயட் பாடினார் சரவணன். எத்தனை நாள்தான் இப்படி எல்லாம் விளம்பரத்தில் மட்டும் டூயட் பாடுவது என யோசித்த சரவணனின் சரவெடி முடிவுதான் சினிமா என்ட்ரி.

2018-ல் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஹீரோவாகியே தீருவது என்ற தீர்மானத்துடன் களம் இறங்கியிருக்கும் சரவணன், தனது நிறுவன விளம்பரப் படங்களின் டைரக்டர் ஜேடி- ஜெர்ரியை தனது முதல் சினிமாப் படத்தின் டைரக்டராக்கிவிட்டார். இதற்குமுன் ஜேடி- ஜெர்ரி டைரக்ட் பண்ணிய படம் விக்ரமின் "உல்லாசம்.'

tamana

ஜேடி- ஜெர்ரி டைரக்டர் என்றாலும் பல முன்னணி டைரக்டர்களிடமும், அசோஸியேட் மற்றும் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருப்பவர்களிடமும் தினமும் கதை கேட்டு வருகிறார் சரவணன். கதை பிடித்திருந்தால், ஆன் தி ஸ்பாட்டிலேயே பத்தாயிரம் ரொக்கம். அத்துடன் ஜவுளி கிஃப்ட் பார்சல் ஒன்று. கதை பிடிக்கவில்லை என்றால், கதை சொன்னவர்களின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அன்றைய தினத்திற்கான சாப்பாட்டுச் செலவுக்குப் பணமும் ஜவுளி கிஃப்ட் பார்சலும் கொடுத்து அனுப்புகிறாராம்.

சரவணனின் கதை இலாகா இந்த ரூட்டில் போய்க்கொண்டிருக்க, ஹீரோயின்கள் செலக்ஷனில் ஏகப்பட்ட பேரை லிஸ்லிட் எடுத்திருக்கிறார். முதலிலில் சரவணன் அப்ரோச் பண்ணியது ஹன்ஸிகாவைத்தானாம். விளம்பரப் படம்னா ஓ.கே., சினிமான்னா சரிப்பட்டு வராது என மறுத்துவிட்டராம் ஹன்ஸிகாவின் மம்மி.

kajal-agarwal

"ஓ.கே. நோ பிராப்ளம்' என கூலாகச் சொன்ன சரவணன், காஜல் அகர்வாலை நோக்கி கவனத்தைத் திருப்பி, அதில் சக்ஸஸும் ஆகிவிட்டார். இப்போது இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் காஜல் அகர்வாலுக்கு அதைவிட டபுள் மடங்கு சம்பளம் என்றதும் ""எஸ் மிஸ்டர் சரவணன், யு ஆர் வெரி நைஸ், வெரி கிரேட்'' என்றபடி ஓ.கே. சொல்லிலிவிட்டாராம் காஜல். தனது நிறுவனத்தின் ஆஸ்தான மாடலான தமன்னாவுக்கும் இதே சம்பளத்தைக் கொடுத்து செம ஹேப்பி ஆக்கிவிட்டாராம் அண்ணாச்சி மகன் சரவணன்.

அண்ணாச்சி மகனின் அதிரடியால் கோலிலிவுட்டே சும்மா அதிருது.

-ஈ.பா.பரமேஷ்வரன்