ந்த காலக்கட்டத்திலும் காதல் படங்களுக்கென்று தனி ரசிகர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட ரசிகர் களோடு அனைத்து தரப்பு ரசிகர்களையும் டி. ராஜேந்தர் பாணியில் காதலால் உருகவைக்க வருகிறது "உதிர்'.

Advertisment

jj

அறிமுக இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குவதோடு, இப்படத்தின் பாடல்களை எழுதி படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார்.

பணக்கார வாலிபனுக்கும், கால் இல்லாத பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலும், அதனைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களும்தான் "உதிர்' படத்தின் கதை.

Advertisment

சரவணன், சதீஷ் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கும் இப்படத்தில் மனிசா, மீனா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் தேவதர்ஷினி, ஓ.எஸ். மணி, மனோபாலா, சிங்கம்புலி, நெல்லை சிவா, போண்டா மணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

அரவிந்த் ஸ்ரீராம் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜோ ஒளிப்பதிவு செய்கிறார்.

சார்ப் ஆனந்த் படத்தொகுப் பாளராகப் பணியாற்றுகிறார்.

ரஞ்சித், உன்னி மேனன், திப்பு, வைக்கம் விஜய லட்சுமி ஆகியோர் இப்படத்தின் பாடல்களைப் பாடியிருக்கிறார் கள்.