ஜிக் ஜாக் இல்லாமல் வரும் யதார்த்த படைப்புகளே சினிமாவின் சக்சஸ் பார்முலா. அந்தவகையில் தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் வெளியான படம் "உஷாரு.'
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vvkathirr.jpg)
சமீபத்தில் வெளியான இந்தப் படம் ஆந்திராவில் கொண்டாடப்படும் படமாகக் கருதப்படுகிறது.
சுமார் மூன்றரைக் கோடியில் தயாரிக்கப்பட்ட படம் சுமார் 20 கோடி வசூலை எட்டும் என்பது தெலுங்கு திரையுலகின் வசூல் கணக்கு... இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளனர்.
இந்தப் படத்தை ஜீவா நடித்து வெற்றிபெற்ற "தெனாவட்டு' படத்தை இயக்கிய வி.வி. கதிர் பத்து வருடங்களுக்குப்பிறகு தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். பலத்த போட்டிக்குப்பிறகு படத்தின் ரீமேக் ரைட்சைக் கைப்பற்றிய காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் ஜெ. பணீந்திரகுமார் தயாரிக்கிறார்... இவர் ஏற்கெனவே பிரபுசாலமன் இயக்கத்தில் "லாடம்' என்ற படத்தைத் தயாரித்தவர்.
புதுமுகங்களும் பிரபலங்களும் இணையவுள்ள இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளவர் ராதன்.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-01/vvkathirr-t.jpg)