Advertisment

நம்ப முடியல -நியூ ஃபேஸ் நடிகையின் அனுபவம்!

/idhalgal/cinikkuttu/unbelievable-new-face-actress-experience

டந்த 22-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது ஹாரர் படமான "மேகி' என்கிற மரகதவல்லி. இப்படத்தில் கதா நாயகியாக பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரியா. அவர் "மேகி' படத்தின் அனுபவங்களைக் கூறுகிறார்...

Advertisment

newfaceactress

""சிறுவயதிலேயே மாடலிங்கிலும் சினிமாவிலும் நடிக்கவேண்டும் என்று ஆர்வம். ப்ளஸ் டூ முடித்தபின் என் விருப்பத்தை அம்மாவிடம் கூறினேன்.

அவர் இதற்கு உடன்படவில்லை. எப்படியாவது

டந்த 22-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது ஹாரர் படமான "மேகி' என்கிற மரகதவல்லி. இப்படத்தில் கதா நாயகியாக பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரியா. அவர் "மேகி' படத்தின் அனுபவங்களைக் கூறுகிறார்...

Advertisment

newfaceactress

""சிறுவயதிலேயே மாடலிங்கிலும் சினிமாவிலும் நடிக்கவேண்டும் என்று ஆர்வம். ப்ளஸ் டூ முடித்தபின் என் விருப்பத்தை அம்மாவிடம் கூறினேன்.

அவர் இதற்கு உடன்படவில்லை. எப்படியாவது என்னை திசைமாற்ற வேண்டுமென்று "நீ ஒரு டிகிரி முடித்துவிட்டு வா. அப்புறம் பார்க்கலாம்' என்றார். அதன்படி நான் பி.எஸ்.சி முடித்து மீண்டும் இதைக் கேட்டபோது, "இன்னொரு மாஸ்டர் டிகிரி முடித்து விட்டு வா' என்றார்.

Advertisment

ஆனால், நான் விடவில்லை. "படித்துக் கொண்டே நடிக்கிறேன் பரவாயில்லை' என்று கூறினேன்.

நான் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டே படித்துக் கொண்டிருந்தேன். அப்படி நான் இயக்குநர் கார்த்திகேயன் சாரைச் சந்தித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி, "நீங்கள் தமிழ்ப் பெண்ணா?' என்பதுதான். ஒரு கணம் யோசித்தேன். ஏனென்றால் நான் வாய்ப்பு கேட்டுப்போன இடங்களி லெல்லாம் தமிழ்ப் பெண் என்பதால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருந்தாலும் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று "நான் தமிழ்ப் பெண்தான்' என்றேன். அவர் சிரித்தார். "தமிழ் பேசக்கூடிய ஒரு தமிழ்ப் பெண்ணைத்தான் என் படத்திற்கு தேடிக்கொண்டிருக்கிறேன்' என்றார்.

என்னால் நம்ப முடியவில்லை. இரண்டு நாளில் மீண்டும் அழைத்து "மேகி' படத்தின் கதையைக் கூறினார்.

படத்தில் வருபவர்கள் எல்லாருமே புதுமுகங்கள். சிலர் மட்டுமே அனுபவம் உள்ளவர்கள்.

அவர்கள் எனக்கு கேமராமுன் எப்படி நிற்கவேண்டும், கேமராவை எப்படிப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். மிகவும் உதவியாக இருந்தது.

இயக்குநர் கார்த்திகேயன் சார் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தினார். அவரே தயாரிப்பாளராக இருந்ததால் அநாவசியமான செலவுகள் தவிர்க்கப்பட்டன. படக்குழுவினர் சுதந்திரமாக இருந்தோம். அனைவரும் நட்புடனும் பழகினர்.

நான் கனவு கண்ட சினிமாவில்- அதுவும் ஒரு படத் தின் முக்கிய மான கதாபாத்திரமாக- கதா நாயகியாக அறிமுகமாகி இருக்கிறேன் என்று நினைத்தால் நம்பமுடியவில்லை'' என உற்சாகத்துடன் பேசினார் ரியா.

cni031219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe