Advertisment

உலகப்புகழ் முன்னிலையில் உள்ளூர்ப் புகழ்!

/idhalgal/cinikkuttu/ulakapapaukala-maunanailaaiyaila-ulalaurapa-paukala

கேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற "மோஜோ ரைஸிங்' பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய "தீரா தீராளே' பாடலை முதன்முறையாகப் பா

கேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற "மோஜோ ரைஸிங்' பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய "தீரா தீராளே' பாடலை முதன்முறையாகப் பாடினார் பாடலிலின் இசை அமைப்பாளரும் பாடகியுமான அஞ்சு பிரம்மாஸ்மி.

Advertisment

muruganmathiram

சர்வதேச போர்ச்சுகீசிய இசை விருதுக்காகத் தேர்வான இந்தியப்பாடகி அஞ்சு பிரம்மாஸ்மி தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், க்ரீக், ஸ்பானிஷ், ரஷ்யன் உள்ளிட்ட 10 மொழிகளில் பாடிக்கொண்டிருப்பவர். அஞ்சு பிரம்மாஸ்மி இசையமைத்துப் பாடும் "இன்விக்டஸ்' ஆல்பத்திற்காக அவருடன் இணைந்துள்ளார். முருகன் மந்திரம். "இன்விக்டஸ்' ஆல்பத்தில் இடம்பெறும் பாடல்களில் ஒன்று "தீரா தீராளே'.

Advertisment

இதுபற்றி முருகன் மந்திரம் கூறுகையில், ""இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஆல்பம். அதிலும் அஞ்சு பிரம்மாஸ்மியுடன் பணியாற்றுவது அலாதி இன்பம். சர்வதேச இசையுடன் தொடர்பும் அனுபவமும் உள்ள அஞ்சு மிக அன்பான தோழியும்கூட. "தீரா தீராளே' பாடல், புரட்சிப்பாடகன் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முதன்முறையாகப் பாடப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி'' என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe