ரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர், திரில்லர் படமாக, வெறும் பத்து நாட்களில் உருவாகி யிருக்கும் "டோலா' படத்தின் வெளியீட்டுவிழா கடந்த வாரம் நடைபெற்றது. இவ் விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:

தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார்

Advertisment

நான் இந்தப் இடத்திற்கு வருவதற்கு காரணம் என் நண்பர்கள்தான். ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் கைதட்டி விடாமலாவது இருங் கள். ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கி றேன். அதுதான் சினிமா.''

dd

கதாநாயகன் ரிஷி ரித்விக்

ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் அனைவரின் கடுமை யான உழைப்பால் பத்து நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். சினிமாத் துறையில் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் செய்தால்தான் நிலைத்து நிற்கமுடியும்.

கதாநாயகி பிரேர்னா

Advertisment

இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். எனக்குத் தமிழ் தெரியாததால் கதாநாயகன் ரிஷி ரித்விக் படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உதவி புரிந்தார்.

தயாரிப்பாளர் கே. ராஜன்

இக்காலகட்டத்தில் சிறிய படம், பெரிய படம் என்ற வித்தியாசமில்லை. கதை நன்றாக இருந்தால் எந்த பட்ஜெட் படமாக இருந்தா லும் வெற்றியடையும்.

இயக்குநர் ஆதிசந்திரன்

நான் ஏகலைவன்போல் இயக்குநர் பாக்யராஜிடம் இயக்கத்தைக் கற்றுக் கொண்டேன். என் விருப் பத்திற்கேற்றாற்போல் இசையமைத்துக் கொடுத்த அணில் மற்றும் மணி இருவருக்கும் நன்றி. ஒளிப்பதி வாளரைப் பற்றி காட்சிகளே கூறும். தயாரிப்பாளர் ஷாம் நல்ல மனிதர்.

நடிகர் சரண்ராஜ்

Advertisment

என்னையும் என் மகனையும் வைத்து "ரகுடு' படத்தைத் தயாரிக்கிறார் ஷாம் குமார்.

அசோக் இப்படத்தை இயக்கு கிறார். இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி.