Advertisment

டி.வி. பார்ட்டியின் சரக்கு சலம்பல்!

/idhalgal/cinikkuttu/tv-party-saragu-shower

டிகர் சூர்யாவின் உயரத்தைக் கிண்டல் பண்ணி, ஒரு நிகழ்ச்சியில் கலாய்த்தவர் அந்த பிரபல சேனலின் தொகுப்பாளினி. சூர்யாவின் ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனக் கணைகளை வீசியதும் பதுங்கிப் பம்மிவிட்டார் அந்த தொகுப்பாளினி. இந்த தொகுப்பாளினியும் இன்னும் சில சேனல்களின் தொ

டிகர் சூர்யாவின் உயரத்தைக் கிண்டல் பண்ணி, ஒரு நிகழ்ச்சியில் கலாய்த்தவர் அந்த பிரபல சேனலின் தொகுப்பாளினி. சூர்யாவின் ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனக் கணைகளை வீசியதும் பதுங்கிப் பம்மிவிட்டார் அந்த தொகுப்பாளினி. இந்த தொகுப்பாளினியும் இன்னும் சில சேனல்களின் தொகுப்பாளினிகளும் சீரியல் ஹீரோயின்களும் ஹீரோக்களும் கூட்டாகச் சேர்ந்து வீக் என்ட் பார்ட்டியில் கூடிக் கும்மியடிப்பார்கள்.

Advertisment

tvparty

சில நேரம் தொகுப்பாளினி மட்டும் தனிமையில் ரவுண்டு கட்டி அடிப்பார். அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நண்பர்களுடன் சரக்குப் பார்ட்டியில் கலந்துகொண்டுவிட்டு, பாரிமுனை ஏரியாப் பக்கம் காரில் மிதந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுவன்மீது தொகுப்பாளினியின் கார் மோதியதில் சிறுவனுக்கு பலத்த காயம். பொதுமக்கள், சரக்குப் பார்ட்டியின் காரைச் சுற்றிக் கூடிவிட, காரில் இருந்து இறங்கவே முடியவில்லையாம் தொகுப்பாளினிக்கு. ஒருவழியாக பொதுமக்கள், கார்க் கதவைத் திறந்து சரக்குப் பார்ட்டியை வெளியே இழுத்தனர். இழுத்ததால் செம டென்ஷனான தொகுப்பாளினி, பொதுமக்களைப் பார்த்து சரமாரியாக கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து, அநியாயத்துக்கு சலம்பித் தள்ளிவிட்டாராம். தொகுப்பாளினியின் சலம்பல் சவுண்டு கேட்டுவந்த போலீஸ், ஒருவழியாக கெஞ்சிக் கூத்தாடி, தொகுப்பாளினியையும் பொதுமக்களையும் ஸ்பாட்டைவிட்டுக் கிளப்பியதாம்.

எல்லாம் சுமுகமா முடிஞ்சு போச்சு. ஆனா அந்த சிறுவனுக்குத் தான் சிகிச்சைக்கு வழியில்லாமப் போச்சு.

-நைட்மேன்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe