/idhalgal/cinikkuttu/tucker

சித்தார்த் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கும் "டக்கர்' படத்தில் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. ""அவரது க

சித்தார்த் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கும் "டக்கர்' படத்தில் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. ""அவரது கேரக்டர் எல்லாரையும் ஆச்சரியப்படுத்தும். அதேநேரம், வயிறு குலுங்கவைக்கும் காமெடி கலாட்டாவாகவும் இருக்கும். திரையில் அப்பா, மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும்.

tt

சித்தார்த் ஜோடியாக திவ் யான்ஷா கௌஷிக் நடிக்கிறார்.

வெவ்வேறு கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவரும் சந்திக்கும் போது, அளவுக் கதிகமான ஈகோ மனநிலை யால், அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதைதான் "டக்கர்' '' என்கிறார் டைரக்டர்.

ஃபேஷன் ஸ்டுடி யோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார்கள். வாஞ்சி நாதன் முருகேசன் ஒளிப் பதிவு செய்ய, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக் கிறார். கௌதம் ஜி.ஏ. படத்தொகுப்பு செய்கிறார்.

cini280120
இதையும் படியுங்கள்
Subscribe