Advertisment
/idhalgal/cinikkuttu/true-story

ரணத்தை வென்ற வாலிபன் ஒருவனின் உண்மைக் கதைதான் "கிரிஷ்ணம்.'

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பள்ளி மாணவன். அவன்படிப்பில் மட்டுமல்ல; நடனம், நாடகம், மேடைப் பேச்சு, விவாதம், விளையாட்டு என்று சகல துறைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தான்.

Advertisment

நடனப் போட்டி ஒன்றுக்காக ஒருநாள் முன்தயாரிப் புப் பயிற்சியில் இருந்த

ரணத்தை வென்ற வாலிபன் ஒருவனின் உண்மைக் கதைதான் "கிரிஷ்ணம்.'

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பள்ளி மாணவன். அவன்படிப்பில் மட்டுமல்ல; நடனம், நாடகம், மேடைப் பேச்சு, விவாதம், விளையாட்டு என்று சகல துறைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தான்.

Advertisment

நடனப் போட்டி ஒன்றுக்காக ஒருநாள் முன்தயாரிப் புப் பயிற்சியில் இருந்தான். கால் பிசகி விழுந்ததில் சிறு காயம் ஏற்பட்டது.

அதற்குமேல் நடந்ததை அக்ஷய் கிருஷ்ணனிடேமே கேட்போம்.

""என் நிலைமை உள்ளூர் டாக்டர்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அப்பா பதற்றமாக இருந்தார்.

truestory

Advertisment

ஒரு டெஸ்ட் எடுத்தார்கள். அப்பா முகம் இறுக்கமாக இருந்தது. அவர் இதை லேசில் விடவில்லை.வெளிநாட்டிலிருந்து மருத்துவக் குழு வந்தது. முதலில் அமெரிக்கா பின்பு லண்டன். அவர்கள் டெஸ்ட் எடுத்தார்கள். ஒன்றும் புரிபடவில்லை. ஒரு டெஸ்ட் டுக்கு எட்டு லட்சம் செலவு. இப்படி டெஸ்ட்மேல் டெஸ்ட் எடுத்தார்கள்.

ஆனால், மருத்துவத்துக்கே எட்டாத அதிசயம் ஒன்று நடந்தது.

என் அப்பா குருவாயூர் கிருஷ்ணன் பக்தர். அவர் மாதம் தவறாமல், முதல் தேதியன்று குருவாயூர் செல்வார். இப்படி 40 ஆண்டுகளாகப் போய் தரிசித்து வருபவர். அந்த குருவாயூரப்பன் நம்பிக் கைதான் என்னைக் காப்பாற்றியுள்ளது. இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? எனக்கு இவ்வளவும் ஆனதை கடைசி வரை என் அம்மாவிடம் அப்பா கூறவே இல்லை. இது தெரிந்தபிறகு அம்மா எனக்கு நிழல்போல் ஆகிவிட்டார்'' என்கிறார்.

தன் மகன் குருவாயூரப்பன் அருளால் உயிர்பிழைத்த அற்புத அனுபவத்தை உலகிற்குக் காட்டவே அதை "கிரிஷ்ணம்' என்கிற படமாக எடுத்து கடந்த 15-ஆம் தேதி ரிலீஸ் பண்ணியுள்ளார். தயாரிப்பாளர் பி.என். பலராம். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் தயாரித்து தன் மகனையே நாயகனாக நடிக்கவைத்துள்ளார். ஹீரோயினாக ஐஸ்வர்யா உல்லால். ஹீரோவின் அம்மாவாக வரும் சாந்திகணேஷ் பளிச்சென இருக்கிறார்.

cine260319
இதையும் படியுங்கள்
Subscribe