trishatitle

ஸ்ரீ குருஜோதி பிலிலிம்ஸ் சார்பாக ஏ. விவேகானந்தன் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் படம் "குற்றப்பயிற்சி.'

"தாரைத் தப்பட்டை' படத்தில் இயக்குநர் பாலாவிடம் பணியாற்றிய வர்ணிக் இப்படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

trisha

Advertisment

1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில், பெண் துப்பறிவாளராக முதன்மை கதாப்பாத்திரம் ஏற்று வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை திரிஷா. மேலும் இப்படத்தில் சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஒரு கொலையும், கொலையின் பின்னணியும் துப்புதுலக்கும்விதமாக விறுவிறுப்பான திரைக்கதை அமைந்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் படத்தின் முதன்மை கதாப்பாத்திரம் பெண் துப்பறிவாளராக நடிப்பது இதுவே முதன்முறை. முதல் இந்தியப் பெண் துப்பறிவாளரான ரஜினி பண்டித் அவர்களை உத்வேகமாகக்கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்துகொண்டபின் நீண்ட இடைவெளிக்குப்பின் பிரியாமணியும் இப்படத்தில் வெயிட்டான கேரக்டரில் நடிக்கிறார்.