Advertisment

பரமபதம் விளையாடும் த்ரிஷா

/idhalgal/cinikkuttu/trisha-playing-snakes-game

த்ரிஷா நடிப்பில் "96' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் "பேட்ட' படத்தில் நடித்துவருகிறார். மேலும் "1818', "பரமபதம் விளையாட்டு' ஆகிய படங்களிலும் நடித்துவருகிறார். இதில் "பரமபதம் விளையாட்டு'

த்ரிஷா நடிப்பில் "96' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் "பேட்ட' படத்தில் நடித்துவருகிறார். மேலும் "1818', "பரமபதம் விளையாட்டு' ஆகிய படங்களிலும் நடித்துவருகிறார். இதில் "பரமபதம் விளையாட்டு' திரைப்படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவ ரின் தாயாகவும் நடிக்கிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டி லுள்ள ராபர்ட் கிளைவ் மேன்ஷனில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

Advertisment

trisha

இந்நிலையில் இப்படம் குறித்து படத்தின் இயக்குநர் திருஞானம் பேசியபோது... ""இதைப்போன்ற ஒரு கதையில் த்ரிஷா முதன்முதலாக நடிக்கிறார். இதை நான் மிகைப்படுத்திக் கூறவில்லை, அதான் உண்மை. த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படங்களில் இது புதுமையான, முக்கியமான படமாக இருக்கும்.

த்ரிஷா இப்படத்தில் நடிப்பது தனக்கு சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார். இந்த கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார். படப்பிடிப்பில் கடினமான காட்சியில் த்ரிஷா ஒரே டேக்கில் நடித்தார். படத்தில் நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருக்கும். ரசிகர்களுக்கு அது மிகவும் பிடிக்கும்'' என்றார். நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஆனா இங்க போட்டோவுல இருப்பதெல்லாம் டால்பினோடு விளையாடும் த்ரிஷா.

cine021018
இதையும் படியுங்கள்
Subscribe