Advertisment

த்ரிஷா சிடுசிடு! நயன்தாரா கிடுகிடு! -இது சினிமா ஓட்டம், காட்டம் சங்கதி!

/idhalgal/cinikkuttu/trisha-chittuzi-nayantara-clamor-cinema-flow

த்ரிஷாவின் "மோகினி ஆட்டம்' ஊத்தி மூடியதால், நொந்து நொம்பலமாகிவிட்டார் படத்தின் தயாரிப்பாள ரும் டைரக்டருமான ஆர். மாதேஷ். ""படம் முழுக்க அமெரிக்காவில் ஷூட்டிங், த்ரிஷாவுக்கு கோடிகளில் சம்பளம்னு மாதேசுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை'' என்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.

Advertisment

ஆனால் த்ரிஷாவுக்கோ, நம்மளோட "மோகினி' ஓடல, ஆனா நயன்தாராவின் "கோலமாவு கோகிலா' செம ஓட்டம் ஓடி கலெக்ஷனையும் குவிச்சுருச்சே என்ற ஆதங்க, ஆத்திரம், கவலை.

trisha-nayan

தெலுங்கு ஹீரோ ராணாவுடனான லவ் பிரேக்-அப் ஆகி, மீண்டும் பிக்-அப் ஆகி, மறுபடியும் பிரேக்-அப் ஆனது. அதற்கப்புறம் வருண் மணியன் என்ற ப

த்ரிஷாவின் "மோகினி ஆட்டம்' ஊத்தி மூடியதால், நொந்து நொம்பலமாகிவிட்டார் படத்தின் தயாரிப்பாள ரும் டைரக்டருமான ஆர். மாதேஷ். ""படம் முழுக்க அமெரிக்காவில் ஷூட்டிங், த்ரிஷாவுக்கு கோடிகளில் சம்பளம்னு மாதேசுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை'' என்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.

Advertisment

ஆனால் த்ரிஷாவுக்கோ, நம்மளோட "மோகினி' ஓடல, ஆனா நயன்தாராவின் "கோலமாவு கோகிலா' செம ஓட்டம் ஓடி கலெக்ஷனையும் குவிச்சுருச்சே என்ற ஆதங்க, ஆத்திரம், கவலை.

trisha-nayan

தெலுங்கு ஹீரோ ராணாவுடனான லவ் பிரேக்-அப் ஆகி, மீண்டும் பிக்-அப் ஆகி, மறுபடியும் பிரேக்-அப் ஆனது. அதற்கப்புறம் வருண் மணியன் என்ற பார்ட்டியுடன் திருமண நிச்சயதார்த்தம் வரை வந்து அதுவும் புட்டுக்கிச்சு. தொலைஞ்சு போறானுங்க, இனிமே தொழில்ல கவனம் செலுத்துவோம்னு த்ரிஷா நினைத்தபோதுதான் வந்து சிக்கினார் ஆர். மாதேஷ்.

"மோகினி' செம ஆட்டம் காட்டும்னு நம்பிக்கை யுடன்தான் இருந்தார் த்ரிஷா. ஆனா ஆட்டம் கண்டது மாதேஷ்தான்.

சரி நடந்தது நடந்து போச்சு, இனிமே நடக்கப் போறதப் பத்தி யோசிப் போம் என யோசிக்க ஆரம்பித்துவிட்டார் த்ரிஷா.

அடுத்ததாக த்ரிஷா பெரிதும் நம்பியிருப்பது ஜோன்ஸ் என்கிற பார்ட்டி தயாரித்துள்ள "கர்ஜனை'-யையும் விஜய் சேதுபதியுடன் ஜோடிபோட்டுள்ள "96' படத்தையும்தான். சில காமுகர்களால் பாலிலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பொண்ணுக்கு ஆதரவாக களம் இறங்கி, கயவர்களை பழி தீர்க்கிறார் த்ரிஷா.

உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படை யாகக்கொண்டு தயாராகி, ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் "கர்ஜனை'-யால் சினிமா உலகில் தமது கர்ஜனை அதிகமாக கேட்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் த்ரிஷா.

ஆனால் "மோகினி' காலை வாரியதால், "கர்ஜனை' போணியாகாமல் போனதால் ஜெர்க்காகி கிடக்கிறார் தயாரிப்பாளர் ஜோன்ஸ். சரி, இது போனா போய்ட்டுப் போகுது, 96 வரும்ல, "96' வரும்ல என த்ரிஷா ஹேப்பியாக இருந்தாலும் அதுக்கும் ஆப்பு வைக்கப்போகிறார்கள் விநியோகஸ்தர்கள். ஏன்னா விஜய்சேதுபதியின் "ஜுங்கா' வசூலும் சொல்லிலிக் கொள்ளும்படி இல்லாததால், அடுத்து வரப்போகும் "96'-ல் பழைய பாக்கியை வசூலிக்கும் திட்டத்தோடு தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் இருக்கிறார் கள். என்ன கொடுமை சார் இது, த்ரிஷாவுக்கு வந்த சோதனை, நம்மளையும் சேர்த்து தாக்குதே என டரியலாகிக் கிடக்கிறார் விஜய் சேதுபதி.

ஆனால் நயன்தாராவோ டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறார். நயன்தாராவை மட்டுமே நம்பி "கோலமாவு கோகிலா'-வை எடுத்த லைக்காவுக்கு ஒரே கோலாகலம்தான், குதூகலம் தான். போட்டதைவிட (அட பணத்த தாங்க சொல்றோம்) இரண்டு மடங்கு கலெக்ஷன் ஆனதால் சில பல லட்சங்களை ஆசை ஆசையாக நயனுக்கு கொடுத்து மகிழ்ந்துள்ளார் லைக்கா ஓனர். கடந்த வாரம் அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் ரிலீசாகிய "இமைக்கா நொடிகள்' படமும் ஹிட் ரகம்தான். தென்னகத்து லேடி ஜேம்ஸ் பாண்டாகவே நயனைக் காட்டி அசத்தி யிருந்தார் அஜய் ஞானமுத்து.

அடுத்ததாக அறிவழகன் டைரக்ஷனில் ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்டி லும் "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' பட டைரக்டரின் பேய்ப் படத்திலும் கமிட்டாகி, பெரும்பாய்ச்சல் காட்டிவருகிறார் நயன்தாரா. நயனின் கிடுகிடு வளர்ச்சியைப் பார்த்து சிடுசிடுக்கிறார் த்ரிஷா.

ம்ம்ம்ம்ம்ம்... கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியுறா. அதுக்காக மத்தவுக சங்கடப்பட்டு என்ன ஆகப் போகுது?

cine180918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe