"பச்சை விளக்கு' படம் பற்றி இயக்குநர் டாக்டர் மாறன் கூறும்போது, ""விதிமீறிய காதலும், விதிமீறிய பயணமும் ஊர்போய்ச் சேராது என்பதை இந்தப் படம் விளக்கும். காவல்துறை குறித்து எத்தனையோ படங்கள் வெளிவந்திருந்தாலும், புது
"பச்சை விளக்கு' படம் பற்றி இயக்குநர் டாக்டர் மாறன் கூறும்போது, ""விதிமீறிய காதலும், விதிமீறிய பயணமும் ஊர்போய்ச் சேராது என்பதை இந்தப் படம் விளக்கும். காவல்துறை குறித்து எத்தனையோ படங்கள் வெளிவந்திருந்தாலும், புதுமையான கதையுடன் இந்தப் படம் இருக்கும். காவல்துறையின் ஒரு பிரிவின் பெருமையைப் போற்றும் பாடமாகவும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தின் கருத்தை இதுவரை எந்த மொழியிலும் சொல்லவில்லை.
இமான் அண்ணாச்சி தனது வழக்கமான பாணியில் மிகுந்த நகைச்சுவை கலந்து, சாலைப் பாதுகாப்பு விதிகளை மக்கள் ரசிக்கும்படி சொல்லி நடித்திருக்கிறார். மனோபாலா காமெடி வயிறு குலுங்கும்படி சிறப்பாக அமைந் துள்ளது. நெல்லை சிவா, நாஞ்சில் விஜயன் காமெடி காட்சிகள் என்றும் பேசும்படி அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்'' என்கிறார்.
இந்தப் படத்தில் "வேதம் புதிது' படப் புகழ் தேவேந்திரன் இசையில் நான்கு பாடல்கள் உருவாகியுள்ளன. பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, மாறன் ஆகியோர் எழுதியுள்ள னர். இந்தப் படத்தின் படப் பிடிப்பு சென்னையில் தொடங்கி, திருப்போரூர், திருவண்ணா மலை உட்பட பல இடங்களில் நடைபெற்றுள்ளது.
"பச்சைவிளக்கு' படத்திற்கு "யு' சர்டிபிகேட் கொடுத்துள்ளது சென்சார் போர்டு.